Breaking News
Home / செய்திகள் / வீட்டில் செல்வம் பெருக நீங்கள் காலையில் இதை மட்டும் செய்தால் போதும்!!

வீட்டில் செல்வம் பெருக நீங்கள் காலையில் இதை மட்டும் செய்தால் போதும்!!

வீட்டில் செல்வம் பெருக நீங்கள் காலையில் இதை மட்டும் செய்தால் போதும்!!

வீட்டில் செல்வம் பெருக நீங்கள் காலையில் இதை மட்டும் செய்தால் போதும்!!

அதிகாலையில் எழுங்கள், உடலும் மனமும் உற்சாகமாகும், அப்படி எழுவதனால், நேரம் போதவில்லை என்று பரபரப்பாக அலுவலகத்துக்கோ, பள்ளி கல்லூரிக்கோ செல்லும் வீட்டின் அங்கத்தினர்கள் அங்கலாய்க்கும், காலை நேர அவசரத்துக்கு, நிரந்தர தீர்வு அளிக்கமுடியும். இதுபோல, நிறைய அவ்வப்போது, கேட்டும் கடந்தும் வந்திருப்போம்.

கேட்கும்போது, மிகவும் ஆர்வமாகக்கேட்டுக்கொண்டு, மறுநாள் பார்த்தால், அதே பரபரப்பு, அதே லேட், அதே கெஞ்சல், ஏன் இந்த நிலை? காலையில் எழுவது என்ன அத்தனை கடினமா? ஏன் எழ முடியவில்லை, அதிகாலையில்?

நேரந்தவறாமை என்பது, நாம் பேணிக்காக்க வேண்டிய பெருஞ்செல்வங்களுள் ஒன்று என்பதை மறந்து போனோம், பெரும்பாலான நிறுவனங்கள், ஊழியர்களின் நேரந்தவறாமையை, உயரிய குணங்களாகப் பார்க்கின்றன, அவர்கள் நேரம் தவறுவதை, கடுமையாக எடுத்துக்கொள்கின்றன.

நம் முன்னோர்களும் நேரத்தின் அவசியத்தை உணர்த்தி, பல வகைகளில் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள், ஆயினும் நம்மால் கடைபிடிக்கமுடியவில்லை, விளைவு? பலவித பாதிப்புகள் நோய்கள்.

காலையில் எத்தனை மணிக்கு எழ வேண்டும்?

வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் குடும்பத்தலைவி அல்லது தலைவர் ஆனாலும், வீட்டு வேலைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதிகாலையில் துயில் எழுவது, சிறப்பாகும். இதனால் பலவித அற்புதங்கள் உங்கள் உடலுக்கு நிகழ்கின்றன.

அதிகாலை என்பது எந்த நேரம்?

அதிகாலை என்பது 4 மணியில் தொடங்குகிறது. நம்மில் சிலரின் அதிகாலை என்பது, ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை என்று இப்போது சொல்வது ஃபேஷனாகிவிட்டது. அப்போது நள்ளிரவு பனிரெண்டு மணியை, என்ன சொல்வார்கள்? இரவு என்றா?, இப்படித்தான் மாறிப்போய்விட்டது, இன்றைய வாழ்வியல் முறைகள்.

இரவில் முழிப்பு :

எல்லோரும் இரவில் நீண்ட நேரம் கண்விழித்து இருக்கவே விரும்புகிறார்கள், காலையில் எட்டு மணிக்கு ஒரு இடத்துக்கு செல்லவேண்டும் என்றால்கூட, பனிரெண்டு அல்லது ஒரு மணி வரை இணைய உலாவலோ, டிவியில் திரைப்படமோ அல்லது ஏதோ ஒன்றைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறகு அலாரம் அடித்து அடித்து ஓயும் ஏழு மணிக்கு மேல் எழுந்து, அவசரமாக குளித்தும் குளிக்காமலும், உடுத்தியும் உடுத்தாமலும், லேட்டாகிவிட்டது என்று ஓடுவார்கள்.

மாலை அதைப்பற்றி, என்ன வழக்கம்போல, டோஸ் விட்டாரு பாஸ் என்று பெருமையுடன் பேசிக்கொள்வரே ஒழிய, தாம் தாமதமாக எழுந்ததனால்தான், இந்தத் திட்டு, என்ற உணர்வு சிறிதும் இருக்காது, அவர்களின் பேச்சில். மீண்டும் அதேதான்ம தொடர்கதையாகும்.

எதனால் இப்படி நடக்கிறது?

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? குழந்தைகளை, நேரத்தில் எழ வைக்கும் பழக்கத்தை சிலர் மட்டுமே தீவிரமாகக் கடைபிடித்தார்கள், ஐந்து அல்லது ஆறுக்குள் எழும் குழந்தைகள், காலைக்கடன்களை முடித்துவிட்டு, குளித்து, சற்று உடற்பயிற்சி செய்துவிட்டு, படிக்க ஆரம்பித்து விடுவர். பின்னர் உணவு அருந்திவிட்டு, பள்ளி அல்லது கல்லூரிக்கு, சைக்கிளில் நேரத்துக்கு சென்றுசேர்வர்.

வாழ்வியல் முறை

நேரத்துக்கு பசி எடுக்கும், உணவை சாப்பிட்டு, மாலையில் சற்றுநேரம் விளையாடிவிட்டு மீண்டும் சிறிதுநேரம் வீட்டுப்பாடங்கள் படித்துமுடித்துவிட்டு, இரவு சாப்பாடு முடித்து, ஒன்பது அல்லது பத்து மணிக்கெல்லாம் உறங்கச் சென்றுவிடுவர். என்ன ஒன்பது மணியா? அது, எங்கள் கணக்கில், மாலை நேரம், தெரியுமா, என்பார்கள் சிலர், அதனால்தான், அதிகாலை என்பது, ஏழு மணியாகத் தெரிகிறது, அவர்களுக்கெல்லாம்!

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close