Breaking News
Home / செய்திகள் / கிழவன், அண்ணன், டியூஷன் டீச்சர், அங்கிள், இன்னும் எத்தனை பேர் திங்க இந்த தேகம்?

கிழவன், அண்ணன், டியூஷன் டீச்சர், அங்கிள், இன்னும் எத்தனை பேர் திங்க இந்த தேகம்?

கிழவன், அண்ணன், டியூஷன் டீச்சர், அங்கிள், இன்னும் எத்தனை பேர் திங்க இந்த தேகம்?

கிழவன், அண்ணன், டியூஷன் டீச்சர், அங்கிள், இன்னும் எத்தனை பேர் திங்க இந்த தேகம்?

பொதுவாக என்னை சுற்றி இருக்கும் மக்கள் ஏன் நீ மற்ற பெண்களை போல திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதில்லை என கேட்பதுண்டு. சிலர், உனக்கு எந்த ஆண் மீதும் ஈர்ப்பே ஏற்பட்டதில்லையா என்றும் வியப்புடன் கேட்பார்கள்.

அவர்களுக்கு எல்லாம் தெரியாது, நான் ஏன் ரயிலில் உறங்க மிகவும் கடினமாக உணர்கிறேன் என, தினமும் உறக்கத்தின் போது நான் எதிர்க் கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன என்று அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது.

இன்று, என்னை நோக்கி கேட்கப்படும் இந்த அனைத்து கேள்விகளுக்கும் ஒவ்வொன்றாக நான் பதிலளிக்க விரும்புகிறேன். அதற்கு முன், எனது வாழ்க்கையை உங்களால் வாழ முடியுமா? என்பது தான் எனது கேள்வி. அனுதினமும் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட வாழ்க்கை தான் என்னுடையது…

ஐந்து வயதிருக்கும்…

அப்போது எனக்கு ஐந்து வயது தான் இருக்கும். அன்று எனக்கு நடந்த கொடுமைகளை எதிர்த்து என்னால் நிற்க முடியவில்லை. இன்று 18 வருடங்கள் கழிந்தும் கூட, நான் அதை எதிர்த்து நிற்க தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இப்போது என் வயது 24. பெங்காலில் வாழ்ந்து வருகிறேன். எனது சிறு வயதில் எனது அப்பாவேறு இடத்தில் பணிசெய்து வந்த காரணத்தால். நான் எனது பள்ளிப்படிப்பை வெளிமாநிலத்தில் பயின்றேன்.

ரயில் பயணம்!

ஒரு நாள் எங்கள் வீட்டில் இருந்து அப்பா வேலை செய்யும் இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அங்கே நான் ஒரு முதியவரை கண்டேன். அவருக்கு ஐந்து வயதில் ஒரு பேரன் இருந்தான். அவர் தனது பேரன் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார்.

அவரை கண்ட போது, அந்த முதியவர் மிகவும் அன்பு காட்டும் நபர் என்று தான் எண்ணினேன். எனது பெற்றோரும் கூட, அந்த முதியவர் தனது பேரன் மீது செலுத்தும் அன்பை கண்டு உருகினார்கள்.

இச்சை!

அவருடன் பழக ஆரம்பித்த போது, நானும் அவரது அன்பை உணர்ந்தேன். எனது தாத்தா போலவே அவரும் என்மீது மிகவும் அன்பு செலுத்தினார். ஆனால், அந்த கிழவன் காட்டியது அன்பு கிடையாது காம இச்சை என்பதை முதலில் நான் அறிந்திருக்கவில்லை.

இரயில் பயணம் இரவை எட்டியது. எங்கள் கம்பார்ட்மெண்டில் அனைவரும் உறங்கிவிட்டனர். திடீரென நான் ஏதோ அசௌகரியமாக உணர துவங்கினேன். உறங்கிக் கொண்டிருந்த எனக்கு, யாரோ என்னை தகாத முறையில் தீண்டுகிரார்கள் என்பதை உணர முடிந்தது. அப்போது எனக்கு வயது வெறும் ஐந்து தான்.

அச்சம்!

எனக்கு என்ன கொடுமை நடக்கிறது என அறிய முடிந்த எனக்கு மிகுந்த அச்சமும் இருந்தது. அப்போது எனது அப்பா எழுந்துவிட்டார். நானும் கண்விழித்துக் கொண்டேன். அப்பாவிடம் நான் இருக்காய் மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறினேன். அது தான் நான் செய்த பெரும் தவறு. நான் கீழ் பர்த்தில் இடம் மாற்றிக் கொண்டேன். இது அந்த கிழவனுக்கு மிக சௌகரியமாக போனது.

கொஞ்சம் நேரம் கழிந்தது… இம்முறை மீண்டும் அதே மாதிரியான தீண்டல். ஆனால், சென்ற முறையை விட மிகவும் மோசமாக. அச்சத்தில் உறைந்துபோன எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பதட்டத்தில் எழுந்து அந்த கிழவனின் கைகளை தட்டிவிட்டேன்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close