Breaking News
Home / செய்திகள் / 3வது மனைவியின் மகன், ஆடு மாடு மேய்த்து குடியரசு தலைவனான இவர் யார் தெரியுமா?

3வது மனைவியின் மகன், ஆடு மாடு மேய்த்து குடியரசு தலைவனான இவர் யார் தெரியுமா?

3வது மனைவியின் மகன், ஆடு மாடு மேய்த்து குடியரசு தலைவனான இவர் யார் தெரியுமா?

3வது மனைவியின் மகன், ஆடு மாடு மேய்த்து குடியரசு தலைவனான இவர் யார் தெரியுமா?

தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் நெல்சன் மண்டேலா. சட்டம் படித்த நெல்சன் மண்டேலா தன்நாட்டில் நிறவெறியை எதிர்த்து போராடிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் எந்த கட்சி, குழு, அமைப்பையும் சேராது அரசை எதிர்த்து கொரிலா தாக்குதல் முறையில் போர் நடத்தினார். இதன் காரணமாக தான் இவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. நீண்டு இருட்டுக்கு பிறகு நெல்சன் மண்டேலா 1990ல் விடுதலையாகி வெளியாகினார்.

அகிம்சை வழியில் போராட்டம், ஆயுதம் ஏந்தி போராட்டம், தேச துரோக குற்றம் என இவர் 27 ஆண்டுகள் சிறையில் கழிக்க பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர் அமைதிக்காக நோபல் பரிசும் வென்றுள்ளார்.

பிறப்பு!

நெல்சன் மண்டேலா 1918ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருக்கும் குலு எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை சோசா எனும் பழங்குடி இனத்தை சேர்தவர். நெல்சன் ரோபிசலா (Rolihlahla) மண்டேலா’. Rolihlahla வின் பொருள் தொல்லை ஏற்படுத்துபவர் என்பதாகும்.

பல திருமணம்!

நெல்சன் மண்டேலாவின் தந்தை பல திருமணம் செய்தவர். அவருக்கு நான்கு மனைவிகள், நான்கு மகன்கள் மற்றும் ஒன்பது மகள்கள் இருந்தனர். நெல்சன் மண்டேலாவின் தாய் அவருக்கு மூன்றாவது மனைவி ஆவார்.

பெற்றோர் நெல்சன் மண்டேலாவின் பெற்றோர் இருவரும் படிப்பறிவு இல்லாதவர்கள்.

முதல் ஆள்!

நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தில் அனைவரும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். தானும் தினமும், ஆடு மாடு மேய்த்துக் கொண்டு தான் பள்ளி சென்று வந்தார் நெல்சன் மண்டேலா. சிறு வயதிலேயே இவர் ஒரு குத்து சண்டை வீரர் ஆவார்.

விட்வாட்டர்ஸ்ரான்ட் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு பயின்று வந்த போது, அந்த பல்கலைகழகத்தில் பயின்றே ஒரே நேட்டிவ் ஆப்ரிக்க மாணவர் நெல்சன் மண்டேலா மட்டும் தான்.

1950களில், நெல்சன் மண்டேலா காலையில் குற்றவியல் வழக்கறிஞராகவும், இரவில் முதிர்ச்சியற்ற குத்துச்சண்டை வீரராகவும் இருந்தார். இது பலருக்கும் தெரியாது.

மகன்கள்!

நெல்சன் மண்டேலாவின் மகன் எய்ட்ஸ் நோய் தாக்கத்தால் உயிரிழந்தவர். நெல்சன் மண்டேலாவின் முதல் மகன் கார் விபத்தில் உயிரிழந்தார். இவருக்கும் இவரது முதல் மனைவிக்கும் 13 வருட இல்லற வாழ்க்கை அரசியல் காரணத்தால் விவாகரத்தில் முடிந்தது. பிறகு, நெல்சன் மண்டேலா தெற்கு ஆப்ரிக்காவின் மொசாம்பிக் அதிபரின் விதவை மனைவியை மறுமணம் செய்துக் கொண்டார்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close