Breaking News
Home / பொழுதுபோக்கு / அந்த சீன் படத்துல வராது..! – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை

அந்த சீன் படத்துல வராது..! – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை

அந்த சீன் படத்துல வராது..! – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை

அந்த சீன் படத்துல வராது..! – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை

சென்னை : ‘காதல் கண் கட்டுதே’, ‘ஏமாலி’ ஆகிய படங்களின் ஹீரோயின் அதுல்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அறிமுகப் படத்திலேயே பல ரசிகர்களை ஈர்த்தவர் இவர்.

அதுல்யா, சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கும் ‘ஏமாலி’ திரைப்படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

இந்தப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். ‘லதா புரொடக்ஷன்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.

ஏமாளியா ஏமாலியா

‘ஏமாலி’ என்ற தலைப்பு முன்பே சர்ச்சைக்குள்ளானது. ஏமாலி என்பது தவறான வார்த்தை. ‘ஏமாளி’ என்பதே சரியான வார்த்தை என ஒருவர் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருந்தார். அதற்கு, தெரிந்தேதான் ‘ஏமாலி’ என்று பெயர் வைத்துள்ளேன். படத்தில் இதற்கான காரணம் இருக்கிறது என்று பதில் கூறினார் இயக்குனர் வி.இசட்.துரை.

ஆபாச சர்ச்சை 

வெளியான டீசரில் நடிகை அதுல்யா ரவி, ஆபாசமான காட்சிகளில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர். ஆடையைக் கழற்றுவது போலவும், படுத்திருக்கும் நிலையிலுமான காட்சிகளும் டீசரில் இடம்பெற்றிருந்தன. இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சிகரெட் பிடிக்கும் காட்சி

அதுல்யா சிகரெட் பிடிக்கும் காட்சியும் படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்தது. முதல் படத்தில் ஹோம்லியாக நடித்துவிட்டு இப்போது இப்படியான நடிப்பில் இறங்குவது தவறு என்கிற ரீதியில் பலரும் தங்களது விமர்சனங்களை வைத்திருந்தனர். அதுல்யாவுக்கு ஆதரவாகவும் பலர் பேசி வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close