Breaking News
Home / உறவுகள் / வா வா பக்கம் வா.. பக்கம் வந்து முத்தம் தா

வா வா பக்கம் வா.. பக்கம் வந்து முத்தம் தா

வா வா பக்கம் வா.. பக்கம் வந்து முத்தம் தா

வா வா பக்கம் வா.. பக்கம் வந்து முத்தம் தா:

சென்னை: எப்பவும் அலுக்காத விஷயம் முத்தம்தான். காதலிலும் சரி, காமத்திலும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் தொடக்கமா இருக்கும். ஸோ, நீ்ங்க ஒரு நல்ல முத்தக்காரராக இருந்தால், காரியத்திலும் கெட்டியாக இருப்பீர்கள் என்று அடித்துக் கூறலாம்.

முத்தம் தர ஏற்ற இடம் என்பதெல்லாம் சினிமாப் பாட்டுக்கு சரியாக இருக்கலாம். நீங்கள் முத்தம் தருவதில் வித்தைக்காரராக இருந்தால் விரல் நகத்தைக் கூட சிலிர்க்கச் செய்யலாம். கொடுக்கும் விதத்தில்தான் எல்லாமே உள்ளது.

மற்ற விஷயங்களைப் போல இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும், கொடுக்கும் ஒரு விஷயம் முத்தம் மட்டும்தான். ஏடிஎம் மெஷின் போல…!

முத்தத்தை, ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். காரணம் முத்தம் என்பதை அன்பின் பரிமாற்றமாக அவர்கள் கருதுகிறார்கள். அதில் ஒரு ஆத்ம திருப்தியும், அன்புத் தழுவலும், திருப்தியும், மன நிம்மதியும், உற்சாகமும் கிடைப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

திரும்பத் திரும்ப திகட்ட திகட்ட

அதிலும் பெண்களுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் முத்தம் கொடுத்தால் அதை பரம சந்தோஷத்துடன் விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள். அந்த இடத்தில் நீங்கள் எத்தனை முத்தம் கொடுத்தாலும் திகட்டாமல், சலிக்காமல், திரும்பத் திரும்ப வாங்கிக் கொள்வார்களாம்.

உதட்டு முத்தம்

பலரும் பெண்களுக்கு உதட்டில் முத்தமிடுவதுதான் ரொம்பப் பிடிக்கும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்படி இல்லை. உதடுகளும் பிடிக்கும்தான். ஆனால் அதே போல மேலும் பல ஏரியாக்களிலும் உதடுகளை உரச விட்டால் அவர்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

கிறங்கும் துணை

பின்னங்கழுத்தில் முத்தமிடுவது பெண்களுக்கு ரொம்பப் பிடித்த ஒன்றாகும். பின்னால் இருந்தபடி அவர்களை கட்டி அணைத்துக் கொண்டு மெதுவாக கழுத்தின் மேல் பகுதியிலிருந்து முத்தமிடுங்கள். தலைமுடியை மெல்ல தூக்கி விலக்கி இச் இச் என்று மெல்லப் பதிக்கும்போது அவர்களுக்குள் உணர்வு நரம்புகள் துவண்டு துடிக்கும். கழுத்தின் பின் பகுதி முழுவதும் மெதுவாக முத்தமிட்டுக் கொண்டே இருங்கள். வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்.

இதமான மசாஜ்

அடுத்து இடுப்பு. இங்குதான் பாலுறுப்புகளுக்குச் செல்லக் கூடிய நரம்புகள் புறப்படுகின்றனவாம். எனவே இந்த இடத்தில் முத்தமிடுவதன் மூலம் உணர்வுகள் வேகமாக தூண்டப்படும். படுக்க வைத்துக் கொண்டு இடுப்பு பகுதியை கைகளால் மெதுவாகப் பிடித்து மசாஜ் செய்யுங்கள். பின்னர் இதழ் பதித்து முத்தமிடுங்கள். வேகமாக அவர் சூடாவதை உணர்வீர்கள். இடுப்போடு சேர்த்து முன்பக்கமும் கைகளை அவ்வப்போது கொண்டு போய் விளையாட்டு காட்டுங்கள்.. இன்னும் வேகமாக சூடாவாவார்.

உயிர்ப்பான முத்தம்

நெற்றி. இது பெண்களுக்கு ரொம்பப் பிடித்த இடம். எந்த ஆண்மகன் நெற்றியில் அதிகம் முத்தமிடுகிறானோ அவன் மீது பெண்களுக்கு ரொம்ப மரியாதையும், அன்பும் உண்டாகுமாம். காரணம், பரவச நிலை மட்டுமல்லாமல் பாசத்தையும் இந்த முத்தத்தில் உணர்வார்களாம் பெண்கள். மேலும் நெற்றியில் முத்தமிடும்போது பெண்களின் உடல் அவர்களையும் அறியாமல் அந்த ஆணிடம் முழுமையாக சரணடைய தயாராகி விடுமாம். முகம் பிடித்து.. இதழ் பதித்து நெற்றி முழுவதும் மெல்ல மெல்ல வைக்கும் “இச்”சுக்கு.. உயிர்ப்பு ஜாஸ்தி பாஸ்!

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close