Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு உருவான நாளை நாம் ஏன் கொண்டாடுவதில்லை தெரியுமா?

தமிழ்நாடு உருவான நாளை நாம் ஏன் கொண்டாடுவதில்லை தெரியுமா?

தமிழ்நாடு உருவான நாளை நாம் ஏன் கொண்டாடுவதில்லை தெரியுமா?

தமிழ்நாடு உருவான நாளை நாம் ஏன் கொண்டாடுவதில்லை தெரியுமா?

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபொழுது,இந்திய நிலப்பரப்பு ஒரே நாடாக இல்லை. இங்கே, 565 சிற்றரசுகள் இயங்கி வந்தன. இந்தியத்துணைக்கண்டத்தில் வணிக நடவடிக்கைகளைத் துவக்கிய கிழக்கு இந்திய வணிக நிறுவனம், கொஞ்சம் கொஞ்சமாக, இந்திய நிலப்பகுதிகளைக்கைப்பற்றிக் கொண்டு, வரி வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

ஆயினும், பிரித்தானியப் பேரரசின் அதிகாரத்துக்கு உட்பட்டே, அந்த ஆட்சிப் பகுதிகள்இயங்கி வந்தன. 1857 ஆம் ஆண்டு, இந்தியாவில் நிகழ்ந்த ‘சிப்பாய் கலகம்’ எனப்படுகின்ற முதல் விடுதலைப் போருக்குப் பிறகு, 1859 ஆம் ஆண்டு, பிரித்தானியப் பேரரசி விக்டோரியா, கிழக்கு இந்திய வணிக நிறுவனத்திடம் இருந்த இந்திய ஆட்சிப் பகுதிகளை,நேரடியாகத் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.

நவம்பர் முதல் தேதி இந்தியாவின் கர்நாடகம், கேரளா,தமிழ்நாடு என மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கர்நாடமும்,கேரளமும் இந்த நாளைக் கொண்டாட தமிழகமோ இந்த நாளை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை… இது ஏன் என்று தெரியுமா?

துவக்கப்புள்ளி

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கை களின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது! தனி மாநில/மாகாண கோரிக்கை களின் தொடக்கம் ஒரிசா 1895-ல் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதி யாக இருந்த ஒரிசாவில் பிரிட்டிஷ் அரசு நிர்வாக வசதிக்காக இந்தியை ஒரிசாவின்மீது திணித்தபோது, சம்பல்பூரில் போராட்டம் வெடித்தது. அதிலிருந்து ஒரிசா தனி மாகாண மாக ஆக்கப்படவேண்டும் என போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், 1935-ல் ஒரிசா தனி மாகாணமாக ஆனது.

காங்கிரஸ் 

சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டி வரும் என்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களால் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால், ஆங்கிலேயர் அமைத்த மாகாணங்கள் இருந்தாலும், பெரும்பா லான இடங்களில் மொழிவாரியாகத்தான் காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

காந்தி-நேரு 

சுதந்திரம் பெற்றதுமே, மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க நேரு எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியா பாதிக்கப்பட்டி ருக்கும் நேரத்தில் மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தால் நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்று நேரு கருதினார்.

ஆனால், மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்ற போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அந்த போராட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதை நேருவால் தடுக்க முடியவில்லை.

பிரிவினை ஆரம்பம்

நாட்டில் பெரும்பாலான பகுதிகள் மொழி அடிப்படையில் தனித்து இருந்ததால் மொழி அடிப்படையில் தனி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1950-களில் எழுந்த்து.ஆரம்பத்தில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேலும் அதனை ஏற்கவில்லை.

ஆனால்,சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்த தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளைப் பிரித்து அதனை விசால ஆந்திராவாக உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு வித்திட்டவர், ஆந்திர காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பொட்டி ஸ்ரீராமுலு.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close