Breaking News
Home / ஆரோக்கியம் / நீங்க செய்யற இந்த தவறுகள் உங்கள் பற்களை மோசமாக்கும்

நீங்க செய்யற இந்த தவறுகள் உங்கள் பற்களை மோசமாக்கும்

நீங்க செய்யற இந்த தவறுகள் உங்கள் பற்களை மோசமாக்கும்

நீங்க செய்யற இந்த தவறுகள் உங்கள் பற்களை மோசமாக்கும்:

முக அழகிற்கு முக்கியமானவை பற்கள். பற்களில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்ப்பட்டாலே அவை உடல்நலனை பெரிதும் பாதிக்கிறது. பற்கள் தொடர்பாக இன்னும் பெரும்பாலனோர் விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

பற்களின் வருகிற முக்கால் பங்கு நோய்களை அது வராமலே முன்கூட்டியே தவிர்க்க முடியும். தானா வரும் நோய்களை பற்களைப் பொறுத்தவரையில் மிகவும் குறைவு.

இதனால் நீங்கள் அன்றாடம் செய்யும் என்னென்ன செயல்கள் எல்லாம் பற்களை பாதிக்கிறது என்பதனையும் பற்கள் பராமரிப்பு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஐஸ் : 

அதிக குளீருட்டப்பட்ட ஐஸ்க்ரீமை கடித்து சாப்பிடுவது.நார்மல் டெம்பரேச்சரில்
இருந்து கொண்டு தீடிரென அதிக குளிரான பொருளை கடித்துச் சாப்பிடுவதால்
பற் கூசும்.

ஈறுகளில் உள்ள திசுக்கள் எல்லாம் பாதிப்படையும் நாளடைவில் அவை பலவீனமடைந்து பாதிப்பை ஏற்படுத்திடும்.

குளிர்பானங்கள் : 

இன்றைக்கு நாகரிகம் கருதி பலரும் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்களை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இவை உடல் நலனுக்கு பெரும் தீங்கு விளைவிப்பவையாகவே இருக்கிறது. மேலும் இது பற்களுக்கும் கேடு தருகிறது.

குளிர்பானங்கள் என்றாலே அது அதிக குளிர்ச்சியை கொண்டு இருக்கும் அதனை அப்படியே அருந்த பற்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் ஈறுகள் வலுவிழக்கும் மற்றும் சர்க்கரை அளவு பற்களை சொத்தை ஆக்கும். பற்களை சுற்றி புண்களை உருவாகும் அபாயம் உள்ளது

பேஸ்ட் :

ஃப்ளோரைட், உப்பு, ஜெல் எனப் பல்வேறு பற்பசைகள் உள்ளன. ஃப்ளோரைட் உள்ள பற்பசையானது பற்களுக்கு வலிமை சேர்க்கும். அதுவும் 10 லட்சத்துக்கு ஒன்று என்ற அளவில் ஃப்ளோரைட் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ட்ரைக்ளோசான் உள்ள பற்பசைகள் ஈறுக்கு வலிமை சேர்க்கும். ஜெல் உள்ள பற்பசைகளைத் தவிர்க்கலாம்.

குழந்தைகள் பற்பசையை விழுங்கிவிடக்கூடும். இதனால் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, பிரத்யேகப் பற்பசைகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கிப்
பயன்படுத்தலாம்.ஒரு பட்டாணி அளவுக்கு பற்பசை இருந்தால் போதும்.

அதைக்கொண்டே பற்களைத் துலக்கலாம். இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் பல் துலக்கிவிட வேண்டும்.

கடிப்பது :

சிலர் டென்சன் ஆனால் நகத்தை கடிப்பது, பேனா, பென்சில் போன்றவற்றை கடிப்பது
எனச் செய்வார்கள். இதனால் பற்களுக்கும் அதன் வேர்களுக்கும் பெரும் பாதிப்பு
உள்ளாக்கிடும்.

நம்மையும் அறியாமல் இதைச் செய்வதால் உடனடியாக நிறுத்த வேண்டியது கட்டாயம்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close