Breaking News
Home / உறவுகள் / காதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்

காதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்

காதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்

காதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்

தூண்டுதல்.. இது இல்லாமல் எந்தக் காரியமும்.. நடக்காது.. காமத்திலும் கூட இந்த தூண்டுதலுக்கு நிறையவே வேலை உண்டு, முக்கியத்துவம் உண்டு.

உடல் ரீதியான உறவுகளுக்கு வாய்ப்பில்லாத நேரத்தில் இதுபோன்ற இன்பத் தூண்டுதல்களும், தீண்டுதல்களும்தான் மனசை சொக்க வைக்கும், உற்சாகப்படுத்தி புத்துணர்வு பெற வைக்கும்.

உடல் ரீதியான சேர்க்கை இல்லாமலேயே கூட அந்த இன்ப உணர்வை இந்த தூண்டல்களும், தீண்டல்களும் நமக்குக் கொடுக்கும். சின்னச் சின்ன சில்மிஷங்கள், உராய்தல்கள், உடல் தொடாமல் உள்ளத்தைத் தொட்டு துவள வைக்கும் இன்பத் தீண்டல்கள்.. உண்மையிலேயே ரசித்து ரசித்து சந்தோஷப்பட வைக்கும் அம்சங்கள் – காதல் கலையில், காம விளையாட்டில்

ஆண்களுக்கு சீக்கிரம்

ஆண்களுக்கு சீக்கிரமே காமத் தூண்டல் ஏற்பட்டு விடும். ஆனால் பெண்கள் உணர்வு பெற்று, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உச்சம் பெற நேரம் பிடிக்கும். அதை முழுமையாகக் கொண்டு வர வேண்டியது ஆண் மகனின் முக்கிய வேலை.

எல்லோருக்கும் ஒன்றுதான்…

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இருவருக்குமே ஒரே மாதிரியான உணர்வுகள்தான் கிளர்ந்தெழும். ஆனால் எழுச்சி பெறும் நேரம்தான் வித்தியாசப்படும்.

லேசாக தட்டினாலே….

ஆண்களுக்கு லேசாக உணர்வுகள் தொடப்பட்டாலே போதும் உச்சத்திற்குப் போய் விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை.. வீணை போல.. மீட்டும் விதத்தில் மீட்டினால்தான் நாதம் வெளிக்கிளம்பும்.. இன்பம் கூட்டும்.

உதடுகளால் தீண்டுங்கள்

பெண்களின் உணர்வுகளைத் தூண்டி விட, நிறைய செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த உதட்டு விளையாட்டு. முன் விளையாட்டுக்களில் இந்த உதடு விளையாட்டுக்கு நிறைய பலன் கிடைக்கும். உதடுகளால் உடல் முழுவதும் தீண்டலாம்.. நெற்றி தொட்டு.. மெல்ல இமைகளில் புகுந்து, காதுகளில் நுழைந்து, காது மடல்களை நனைத்து, கழுத்தை அரவணைத்து, கன்னத்தைக் கடித்து, நாசியில் நடமிட்டு.. உதடுகளில் கொண்டு வந்து நிறுத்துங்கள் உங்கள் இதழ்களை…. இதழியல் கலையில் இப்படி ஒரு இன்பமா என்பதை உணர்வீர்கள்.

முத்த மழையில் நனையுங்கள்

அடுத்து முத்த மழை.. மறுபடியும் மேலே இருந்து வரலாம்… சின்னச் சின்னதாக செல்லக் குரலில் பேசியபடி, கொஞ்சியபடி, முனுமுனுத்தபடி முத்தம் வைத்து வரலாம்.. ஒவ்வொரு இடத்திலும் சின்னச் சின்னதாக கவிதை வாசித்தபடி… காதல் மொழி பேசியடி.. காமக் குரலில் கிசுகிசுத்தபடி முத்தம் இடும்போது உள்ளுக்குள் அவரது உணர்வுகள் சத்தம் இடுவதை உணரலாம்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close