Breaking News
Home / பொழுதுபோக்கு / ரஜினியின் 2.0 படம் தமிழ்புத்தாண்டுக்கு ரிலீஸ் – கோடையில் கொண்டாட்டம்

ரஜினியின் 2.0 படம் தமிழ்புத்தாண்டுக்கு ரிலீஸ் – கோடையில் கொண்டாட்டம்

ரஜினியின் 2.0 படம் தமிழ்புத்தாண்டுக்கு ரிலீஸ் – கோடையில் கொண்டாட்டம்

ரஜினியின் 2.0 படம் தமிழ்புத்தாண்டுக்கு ரிலீஸ் – கோடையில் கொண்டாட்டம்

சென்னை: ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் 2.0. எமி ஜாக்ஷன் கதாநாயகியாகவும், அக்ஷய் குமார் வில்லனாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

கதாநாயகன் ரஜினிகாந்த்தின் கெட்டப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

2.0 மிரட்டல் தொழில் நுட்பம் 

பிரம்மாண்ட படைப்புகளுக்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் பார்ட் 2வாக இந்த திரைப்படம் பார்க்கப்படுகிறது. மிரட்டும் கிராபிக்ஸ், 3டி தொழில்நுட்பம் என்று 2.0 பிரம்மாண்டங்களுக்கு குறைவில்லாமல் காட்சியாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் சில வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ரூ.400 கோடி செலவில் தயாரிப்பு 

சுமார் 400 கோடியில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. 2 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் 2.0 திரைப்படம் 2018 ஜனவரி மாதத்தில் குடியரசு தினத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close