Breaking News
Home / பொழுதுபோக்கு / போய்ட்டு வரேன்… ஓவர் ஓவர்!’ – ரசிகர்களுக்கு குட்பை சொல்லும் ‘மெர்சல்’ எமோஜி!

போய்ட்டு வரேன்… ஓவர் ஓவர்!’ – ரசிகர்களுக்கு குட்பை சொல்லும் ‘மெர்சல்’ எமோஜி!

போய்ட்டு வரேன்… ஓவர் ஓவர்!’ – ரசிகர்களுக்கு குட்பை சொல்லும் ‘மெர்சல்’ எமோஜி!

போய்ட்டு வரேன்… ஓவர் ஓவர்!’ – ரசிகர்களுக்கு குட்பை சொல்லும் ‘மெர்சல்’ எமோஜி!

சென்னை : ‘மெர்சல்’ படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மெர்சல் ட்விட்டர் எமோஜி விரைவில் செயலிழக்க இருக்கிறது. இந்தச் செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்யின் ‘மெர்சல்’ படம் ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்போடு வெளியானது அனைவருக்கும் அறிந்ததே. படம் வெளியாவதற்கு முன்பே பயங்கரமான ப்ரொமோஷன் முயற்சிகளும் செய்யப்பட்டன.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் படத்திற்காக நிறைய வித்தியாசமான புரொமோஷன் வேலைகள் செய்தனர். அதில் ஒன்றுதான் இந்த ட்விட்டர் எமோஜி. ‘மெர்சல்’ அல்லது மெர்சல் தொடர்பான ஹேஸ்டேக்குகளுக்கு விஜய்யின் படம் வந்துவிடும்.

கபாலிக்குக் கிடைக்காத பெருமை 

ஏற்கெனவே, ‘கபாலி’ படத்திற்கு எமோஜி வெளியிட முயற்சிசெய்யப்பட்டது. ஆனால், அப்படத்திற்குக் கிடைக்கவில்லை. விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் விதமாக ‘மெர்சல்’ எமோஜி வெளியிட்டது. தமிழ் சினிமாவின் முதல் எமோஜி எனும் பெருமையும் மெர்சலுக்குக் கிடைத்தது. எமோஜி வெளியிடப்பட்டது முதல் ரசிகர்கள் அந்த எமோஜியைக் குறிப்பிட்டு ட்வீட்டுகளைத் தெறிக்கவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close