Breaking News
Home / செய்திகள் / ஒரே நிமிடத்தில் உயிரை பறிக்கக் கூடிய உலகின் கொடிய விஷங்கள்

ஒரே நிமிடத்தில் உயிரை பறிக்கக் கூடிய உலகின் கொடிய விஷங்கள்

ஒரே நிமிடத்தில் உயிரை பறிக்கக் கூடிய உலகின் கொடிய விஷங்கள்

ஒரே நிமிடத்தில் உயிரை பறிக்கக் கூடிய உலகின் கொடிய விஷங்கள்

விஷம் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது பாம்புகள் தான். அதில் நாகப்பாம்பு, ராஜ நாகம் போன்றவை நமது மனதில் வந்து உதிக்கும் முதன்மை பெயர்கள். பாம்பு, தேள் போன்றவற்றில் விஷம் இருக்கிறது, இவை கடித்தாலோ, கொத்தினாலோ இறந்துவிடுவோம் என்ற அச்சம் நம் மத்தியில் இருக்கிறது.

ஆனால், உலகில் இவற்றை விட மிகவும் கொடிய, அபாயகரமான விஷத்தன்மை கொண்ட இயற்கையான தாவரங்கள், உயிரினங்கள், இரசாயனங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இவற்றில் பெரும்பாலானை நுகர்ந்து பார்த்தாலோ, சருமத்தில் ஊடுருவினாலோ கூட மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்டுள்ளன….

#20 சயனைடு!

சயனைடு என்பது ஒரு வர்ணமற்ற கேஸ் அல்லது கிறிஸ்டல் ஆகும். இந்த இரண்டில் எந்த வகையில் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சயனைடு மிகவும் கொடிய விஷமாகவே காணப்படுகிறது. இது கசப்பான பாதாமை போன்ற வாசம் கொண்டதாகும். சயனைடு வாசத்தை நீங்கள் நுகர்ந்தால் தலை வலி வரும், குமட்டல் வரும், இதய துடிப்பு குறையும், மூச்சு திணறல் ஏற்படும். இது அனைத்தும் ஓரிரு நிமிடத்தில் ஏற்படும். இது உடலில் இருக்கும் ஆக்சிஜன் செல்களை இழக்க செய்து மரணத்தை உண்டாக்கும்.

#19 ஹைட்ரோஃப்ளூரிக் அமிலம்

டெஃப்ளான் உற்பத்தியில் விஷமாக கருதப்படும் ஹைட்ரோஃப்ளூரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இது நீர்மமாக இருக்கும் போது எளிதாக சருமத்தின் வழியாக இரத்த நாளங்களை அடைந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. இது கால்சியமுடன் ரியாக்ட் ஆகி, எலும்புகளையும் அழிக்கலாம். இதில் பயங்கரமான விஷயம் என்னவெனில், இது முதலில் உடலோடு தொடர்பு ஏற்படுத்தும் போது பெரிதாக வலியை ஏற்படுத்தாது. சேதம் ஏற்படுத்த கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளும்.

#18 ஆர்செனிக்

ஆர்செனிக் 19ம் நூற்றாண்டில் ஆயுதங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட விஷம் ஆகும். சில மணி நேரங்களில் இறப்பை ஏற்படுத்திவிடும் அளவிற்கு விஷத்தன்மை கொண்டது ஆர்செனிக். இது உங்கள் உடலில் ஊடுருவிய உடன் வாந்தி, பேதி எல்லாம் உண்டாகும். காலராவுக்கும், இதன் தாகக்திற்கும் மத்தியில் இருக்கும் வேற்றுமையை கண்டறிவது 120 வருடங்களுக்கு முன்னர் மிகவும் கடினமாக இருந்தது.

#17 பெல்லடோனா (Belladonna)

பெல்லடோனா என்பது மிகவும் விஷத்தன்மை கொண்ட மூலிகை / மலராகும். இதில் இருக்கும் அட்ரோபைன் எனும் பகுதியில் இருந்து தான் விஷத்தன்மை உருவாகிறது. இதன் அனைத்து பாகங்களும் விஷத்தன்மை கொடுள்ளதாகும். முக்கியமாக இதன் வேர் மிகவும் விஷத்தன்மை கொண்டுள்ளது. வெறும் இரண்டு பெல்லடோனா மலரை உட்கொண்டால் போதும் அவர்கள் மரணித்து விடுவார்கள்.

#16 கார்பன் மோனாக்சைடு

வாசமற்ற, சுவையற்ற, நிறமற்ற கொஞ்சம் அடர்த்தி குறைவான காற்று இந்த கார்பன் மோனாக்சைடு. இதன் விஷத்தன்மை உயிரை கொள்ளும் வீரியம் கொண்டுள்ளது. இதை கண்டறிவது கொஞ்சம் கடினம். எனவே, தான் இதற்கு சைலன்ட் கில்லர் என்ற பெயரும் இருக்கிறது. இது ஒருவர் உடலில் ஊடுருவிவிட்டால், காய்ச்சல், தலைவலி, வலுவின்மை, உறக்கமின்மை, குமட்டல், தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். கடைகளில் கார்பன் மோனாக்சைடு டிடக்டர்கள் விற்கப்படுகின்றன.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close