Breaking News
Home / செய்திகள் / 5 ஆண்டு கப்பல் பயணத்தில், மனித இன இரகசியங்களை போட்டுடைத்த சார்ல்ஸ்!

5 ஆண்டு கப்பல் பயணத்தில், மனித இன இரகசியங்களை போட்டுடைத்த சார்ல்ஸ்!

5 ஆண்டு கப்பல் பயணத்தில், மனித இன இரகசியங்களை போட்டுடைத்த சார்ல்ஸ்!

5 ஆண்டு கப்பல் பயணத்தில், மனித இன இரகசியங்களை போட்டுடைத்த சார்ல்ஸ்!

சார்லஸ் டார்வின், மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் என்பதை உலகில் முதன் முறையாக கண்டறிந்து கூறிய இயற்கையியல் அறிஞர்.

தி ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புத்தகத்தில், இவர் கண்டறிந்த புரட்சிகரமான அறிவியல் கொள்கைகள் பற்றியும், படிம வளர்சிக் கொள்கைகள் பற்றியும் விவரித்து கூறியிருந்தார். இந்த நூல் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எஸ். பீகிள் எனும் கப்பலில் இவர் உலகம் முழுக்க பயணம் மேற்கொண்டு பல உயிரின கண்டுபிடிப்புகள் அறிந்து வியப்பை உண்டாக்கினார். காலபாகசுத் (Galápagos) தீவுகளில் இவர் நடத்திய ஆய்வுகள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகள் பிரபலமானவை.

பிறப்பு!

டார்வின் இங்கிலாந்தில் 1809ம் ஆண்டு பிப்ரவரி 12 தேதி பிறந்தவர். இவரது தந்தை ராபர்ட் ஒரு மருத்துவர், இவரது தாத்தாவும் மருத்துவரே. தனது குழந்தை பருவத்திலேயே தாயை இழந்தவர் சார்லஸ் டார்வின். இவர் தனது சிறுவயது முதலே புழு, பூச்சிகள் மீது மிகுதியான ஆர்வம் கொண்டிருந்தார்.

தந்தையின் ஆசை!

சார்லஸ் டார்வினின் தந்தை ராபர்ட், தன்னை போலவே தனது மகனும் ஒரு மருத்துவர் ஆகவேண்டும் என விரும்பினார். இதற்காக இவரை எடின்போ பலகலைகழகத்தில் சேர்த்தார். ஆனால், சார்லஸ்’க்கு இயற்கை மற்றும் நிலம் குறித்து படிக்கவே ஆர்வம் இருந்தது. இவற்றில் சிறந்த மாணவராகவும் திகழந்தார் சார்லஸ். இதனால், மருத்துவத்தில் நாட்டத்தை இழந்தார்.

செடி, கொடி மீதான காதல்…

எடின்பர்க் சென்ற பிறகும் கூட, தனது காதலான புழு, பூச்சி, செடிகொடிகள் மீதே தொடந்தது. இவற்றை மிகவும் விரும்பி சேமிக்க ஆரம்பித்தார். தான் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த போது, அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து இன்றி சிகிச்சை மேற்கொள்ளும் போது, அதை கண்டு மிகவும் மனம் வருந்தினார் சார்ல்ஸ்.

ஜான் ஹென்ஸ்லோ!

சார்லஸின் 22வயதில் ஜான் ஹென்ஸ்லோ என்ற தாவரவியல் துறை அறிஞரின் நட்பு கிடைத்தது. பிறகு, கேப்டன் ராபர்ட் உடன் நட்பு கூடியது. இதன் மூலமாக அமெரிக்க கடலோர பகுதிகளில் அராய்ச்சி மேற்கொள்ள எச்.எம்.எஸ். பீகிள் கப்பலில் பயணிக்க கேப்டன் ராபர்டின் நட்பு உதவியது. இரண்டு ஆண்டுகளில் முடியவேண்டிய பயணம், ஐந்தாண்டுகள் நீடித்தது. இது தான் இவரது வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

குரங்கு – மனித பரிணாமம்!

இந்த பயணத்தின் போது தான் சார்ல்ஸ் பரிணாம வளர்ச்சி கொள்கை உருவாக்க வித்தாக அமைந்தது. இந்த ஐந்தாண்டில் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. பல சிக்கல், பிரச்சனைகளை தாண்டி, அந்த கடல் பயணத்தை சார்லஸ் முடித்தார்.

இந்த பயணத்தின் போது பல புதிய உயிரினங்கள், எலும்புகள், ஊர்வன, பறப்பன, நடப்பன என பல ஒற்றுமை, வேற்றுமைகளை அறிந்தார் சார்ல்ஸ். இது முன்னோர்களின் வழித்தோன்றல்கள் பற்றி ஆராய இவருக்கு பெரும் உதவியாக அமைந்தது.

அப்போது தான் உயிரினங்கள் மத்தியில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி உருவாகிறது என்ற கேள்வி சார்ல்ஸ் டார்வினிடம் பிறந்தது.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close