Breaking News
Home / செய்திகள் / ஹரப்பன் நகரம்! சிந்து சமவெளி நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டு

ஹரப்பன் நகரம்! சிந்து சமவெளி நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டு

ஹரப்பன் நகரம்! சிந்து சமவெளி நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டு

ஹரப்பன் நகரம்! சிந்து சமவெளி நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டு

ஹரப்பன் நாகரீகத்தில் எஞ்சியவைகளை கொடுள்ளதால் தோலாவிரா மிகவும் புகழ் பெற்று விளங்குவதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் கருதப்படுகிறது .

இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்தின் முக்கியமான தொல்பொருள் இடமாக விளங்கும் தோலாவிரா, ரான் ஆப் கட்சில் உள்ள கதீர் பெட்டில் உள்ளது. இந்த இடத்தை டிம்பா ப்ரச்சின் மகாநகர் கோட்டடா என்றும் உள்ளூர்வாசிகள் அழைக்கின்றனர். இங்கு தோண்டி கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பன் நகரம் தான் தோலாவிராவின் முக்கிய ஈர்ப்பாகும்.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பட்ட பொருள்களில் இந்து சமயத்துக்குள்ளான சிலை வழிபாடுகளுக்குரிய ஆதாரம் எதும் கிடைத்ததா? உண்மையில் இந்து சமயம் சிந்து சமவெளியிலிருந்து பிறந்ததா என்பன பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

சிந்து சமவெளி நாகரிகம்

சிந்துவெளி நாகரிகம் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இதன் எச்சங்களை இந்தியாவின் வடமேற்கு மாநிலங்கள் சிலவற்றில் காணமுடிகிறது. அகழ்வாய்வுகளுக்காக இருக்கும் அந்த இடங்களைப் பற்றி காணும்போது நமக்கு சில உண்மைகள் புரியும் என நம்பலாம்,.

தோலவிரா

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த தோலவிரா. இங்குதான் ஹரப்பன் எனப்படும் சிந்து சமவெளி நாகரிக தொடர்புகள் காணப்படுகின்றன.

நாகரிகத்தின் சான்றுகள்

ஹரப்பன் நாகரீகத்தில் வாழ்ந்த மக்களின் நாகரீகம், மொழி, கலை, கட்டடக் கலையின் திட்டங்கள் போன்றவைகளை பற்றிய பல விஷயங்கள் இங்கே கண்கூடாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவதால், தோலாவிரா மனிதனின் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட இந்நகரம், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது – அவை கோட்டை, மத்திய நகரம் மற்றும் கீழ் நகரம்.

சிறப்பம்சங்கள்

நகரத்தின் மையப்பகுதி கோட்டையால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் மற்றவைகளை போல செங்கல்களால் கட்டப்படாமல் முழுவதுமாக கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதன் மற்றொரு முக்கிய அம்சமாக விளங்குவது பல நீர்த் தேக்கத்தின் உதவியுடன் செயல்பட்டு வந்த நீர் பாதுகாப்பு அமைப்பு. அணிகலன்கள், பாத்திரங்கள், தங்கங்கள், வெள்ளிகள், கடின மட்பாண்ட (டெர்ரகோட்டா) பாத்திரங்கள் மற்றும் மெசோபோட்டமியனை சேர்ந்த சில பொருட்கள் போன்ற கலை பொருட்கள் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஹரப்பன் நகரம்

ஹரப்பன் நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவாரசியத்தையும் திகிலையும் கலந்து அளிக்கும் விதமாக அமையும். மிகவும் சிறிய இடமான தோலாவிரா, புஜ்ஜிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனை உள்ளூர்வாசிகள் கோட்டடா டிம்பா என்றும் அழைக்கின்றனர்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close