Breaking News
Home / பொழுதுபோக்கு / யுவன் பாட.. சந்தானம் ஆட.. சிம்பு மியூசிக் போட.. ஒரே கூத்துதான்! – ‘காதல் தேவதை’ லிரிக்கல் வீடியோ

யுவன் பாட.. சந்தானம் ஆட.. சிம்பு மியூசிக் போட.. ஒரே கூத்துதான்! – ‘காதல் தேவதை’ லிரிக்கல் வீடியோ

யுவன் பாட.. சந்தானம் ஆட.. சிம்பு மியூசிக் போட.. ஒரே கூத்துதான்! – ‘காதல் தேவதை’ லிரிக்கல் வீடியோ

யுவன் பாட.. சந்தானம் ஆட.. சிம்பு மியூசிக் போட.. ஒரே கூத்துதான்! – ‘காதல் தேவதை’ லிரிக்கல் வீடியோ

சென்னை : சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்காக முதன்முதலாக, சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார். இன்னொரு பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் சேதுராமன் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சக்க போடு போடு ராஜா.’ இந்தப் படத்தில் நாயகியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். வி.டி.வி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகும் படம் என்பதால், அதன் அறிவிப்பு வந்ததிலிருந்தே பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. தற்போது யுவன் பாடியிருக்கும் ‘காதல் தேவதை’ பாட்டின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

சந்தானம் நடிக்கும் படத்தில் சிம்பு, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என நண்பர்கள் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close