Breaking News
Home / தொழில்நுட்பம் / நீங்கள் அதிகமாக ‘பார்ன்’ பார்த்தால், கூகுள் இந்த மெஸேஜை உங்களுக்கு அனுப்பும்.!

நீங்கள் அதிகமாக ‘பார்ன்’ பார்த்தால், கூகுள் இந்த மெஸேஜை உங்களுக்கு அனுப்பும்.!

நீங்கள் அதிகமாக ‘பார்ன்’ பார்த்தால், கூகுள் இந்த மெஸேஜை உங்களுக்கு அனுப்பும்.!

நீங்கள் அதிகமாக ‘பார்ன்’ பார்த்தால், கூகுள் இந்த மெஸேஜை உங்களுக்கு அனுப்பும்.!

‘பார்ன்’ என்று கூறியதுமே நம்மில் பலருக்கு பதற்றம் தொற்றிக்கொள்ளும்; எதோ பாவிகளைப்போல உணர்வோம்.

‘செக்ஸ்’ என்ற வார்த்தையைக்கேட்டாலே அலறுவோம், ஆனால் இந்தியர்களுக்கு ‘செக்ஸ்’ என்ற வார்த்தை மீதான தேடல்கள் எவ்வளவு பிடிக்குமென்பதை கூகுளிடம் கேளுங்கள் – புள்ளி விவரங்களுடன் புட்டுப்புட்டு வைக்கும்.

ஆக, அதெல்லாம் ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும். இது சரி, இது தவறு – என்ற கோட்பாடுகளையும், இதையெல்லாம் துணிந்து செய்யலாம், இதையெல்லாம் மறைத்து செய்யலாம் – என்ற ‘ஆப்ஷன்’களையெல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு, ஜென்ரலான ஜென்ரல் ஆடியன்ஸாக கொஞ்சம் பேசுவோம்.!

அதென்ன மெஸேஜ்.?

ஒருவேளை நீங்கள் அளவுக்கு அதிகமாக ‘பார்ன்’ வலைத்தளங்களை அணுகினால், ‘பார்ன்’ பார்த்தால் – கூகுள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ‘குறியீட்டு’ மெஸேஜை அனுப்பும். அதென்ன மெஸேஜ்.?

ரகசியமான முறையில்.!

மிகவும் சங்கடமான அல்லது பிறர் அறிந்துகொள்ள கூடாத தேடல்களை ஒருவர் நிகழ்த்தும் நோக்கத்தில் உருவானது தான் இன்காக்னிட்டோ (incognito) – பெரும்பாலான மக்கள் இந்த அம்சத்தினை ரகசியமான முறையில் ஆபாச வலைத்தளங்களை அணுகவே பயன்படுத்தப்படுகின்றனர்.

எதிலுமே எந்த ஆதாரத்தையும் சேமிக்காது.!

ஆம், கூகுள் க்ரோமின் மறைநிலைப் பயன்முறையானது (incognito mode) உங்களுக்கு மிகவும் பிடித்த தேடல்களை மிகவும் ரகசியமாக நிகழ்த்த உதவும். அதாவது எந்தவிதமான ப்ரவுஸிங் ஹிஸ்டரி ஆதாரத்தையும் சேர்க்காமல் இணையத்தினை உலவ அனுமதிக்கிறது, உங்கள் லேப்டாப் அல்லது போன் ஆகிய எதிலுமே எந்த ஆதாரத்தையும் சேமிக்காது.

ஒரு சமிக்ஞை கிடைக்கும்.!

ஒருவர் அதீத மறைநிலைப் பயன்முறையை நிகழ்த்த, இந்த இன்காக்னிட்டோவிற்கு பின்னால் மூளையாக செயல்படுவது உலகின் மிகப்பெரிய தேடல்பொறியான கூகுளிடம் இருந்து அவருக்கொரு சமிக்ஞை கிடைக்கும். அதாவது, நீங்கள் ஒரு 100 இன்காக்னிட்டோ விண்டோஸ்களை திறக்கும்போது, ​​ஒரு புன்னகைக்கும் ஸ்மைலி அல்லது கண்சிமிட்டும் ஸ்மைலி ஸ்க்ரீனில் தோன்றுகிறது.

மேல் வலது மூலையில் தென்படும்.!

அதாவது, விண்டோவின் மேல் வலது மூலையில் தென்படும் வழக்கமான டேப் கவுன்டர் அருகில் ஸ்மைலி ஒன்றை பார்ப்பீர்கள். ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஒரு 😉 கண்சிமிட்டும் ஸ்மைலியும், ஐஓஎஸ் சாதனங்களில் 🙂 ஒரு சாதாரண ஸ்மைலியையும் காண முடியும்.

கூகுள் தெளிவாக கூறியதில்லை.!

இன்காக்னிட்டோ விண்டோஸ் பயன்படுத்தும் பெருமளவிலான பயனர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும் இந்த ஸ்மைலிக்களின் அர்த்தம் என்னவென்பது பற்றிய விளக்கத்தினை இந்நாள் வரை கூகுள் தெளிவாக கூறியதில்லை. இருப்பினும் இந்த ஸ்மைலி நீங்கள் ‘இன்காக்னிட்டோ என்ற ரகசிய பயன்முறையின்கீழ்’ எந்த எல்லையில் இருக்கிறீர்கள் என்பதை மிகவும் நாசுக்காக உணர்த்தும் ஒரு குறியீடு என்றே பெரும்பாலும் நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close