Breaking News
Home / தொழில்நுட்பம் / வேற போன் வாங்கிடாதீங்க.! 4000எம்ஏஎச் பேட்டரியுடன் ‘சூப்பர் பட்ஜெட்’ விலையில் நோக்கியா 2.!

வேற போன் வாங்கிடாதீங்க.! 4000எம்ஏஎச் பேட்டரியுடன் ‘சூப்பர் பட்ஜெட்’ விலையில் நோக்கியா 2.!

வேற போன் வாங்கிடாதீங்க.! 4000எம்ஏஎச் பேட்டரியுடன் ‘சூப்பர் பட்ஜெட்’ விலையில் நோக்கியா 2.!

வேற போன் வாங்கிடாதீங்க.! 4000எம்ஏஎச் பேட்டரியுடன் ‘சூப்பர் பட்ஜெட்’ விலையில் நோக்கியா 2.!

உலக ஸ்மார்ட்போன் சந்தைக்கு ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்று கர்ஜிக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பற்றிய அறிமுகம் யாருக்குமே தேவைப்படாது. அத்தனை பெருமையும் நோக்கியா பிராண்ட் தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கே சேரும்.

நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் நோக்கியா 7 ஆக இருக்கலாமென்று நாமெல்லாம் எதிர்நோக்கி காத்திருக்க, ஒரு ஸ்வீட் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த நோக்கியா ஆண்ட்ராய்டு – நோக்கியா 2 ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.

விலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது

நோக்கியா 2 பற்றிய பல வதந்திகளை நாங்கள் கேட்டிருக்கிறோம், தற்போது வெளியாகியுள்ள தகவலானது, அமெரிக்க அடிப்படையிலான இ-காமர்ஸ் தளத்தில் சாதனத்தின் விலை வெளிப்படுத்தப்பட்டுள்ளதின் கீழ் அறியப்படுகிறது.

கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில்

ஐக்கிய அமெரிக்கவில் திறக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் பி&எச் வலைத்தளமானது, நோக்கியா 2 கருவியை கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் 99 டாலர்களுக்கு (சுமார் ரூ.6,440) பட்டியலிடப்பட்டுள்ளது.

இரட்டை சிம்

இரட்டை சிம் சாதனமான வெளிப்படுத்தப்பட்ட நோக்கியா 2 பற்றிய வலைதள விவரங்கள் செய்தி ஊடகங்களில் கண்களில் தென்பட்டு வெளியே வந்தவுடன், வலைப்பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது.

நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்

முன் அறிவிக்கப்பட்டபடி, புதிய நோக்கியா 2 என்ற நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை பொறுத்தமட்டில், விற்பனைப் பகுதியைப் பொறுத்து, இக்கருவி இரண்டு வகைகளில் விற்கப்படும்: டிஏ-1035 (அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்டது) மற்றும் டிஏ-1029 (ரஷ்யாவில் சான்றிதழ் பெற்றுள்ளது).

பாலிகார்பனேட் அடிப்படையிலான ஷெல்

இது 4.5 அங்குல எல்சிடி ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் பலமான பாலிகார்பனேட் அடிப்படையிலான ஷெல் இடம்பெற்றுள்ளது. மேலும் இக்கருவி 1.3GHz க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 212 க்வாட்-கோர் (ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ7 x 4) செயலி கொண்டிருக்கலாம்.

1 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி சேமிப்பு 

மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் (அண்ட்ராய்டு ஓரியோ புதுப்பிப்பு உத்தரவாதத்துடன்), 1 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி சேமிப்பு (மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக விரிவாக்க ஆதரவு) எல்இடி ப்ளாஷ் ஆதரவு கொண்ட ஒரு 8எம்பி பின்பக்க கேமரா மற்றும் செல்பீக்களுக்கான 5எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கலாம்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close