Breaking News
Home / வரலாறுகள் / ரைட் சகோதரர்கள் வாழ்க்கை வரலாறு

ரைட் சகோதரர்கள் வாழ்க்கை வரலாறு

ரைட் சகோதரர்கள் வாழ்க்கை வரலாறு

ரைட் சகோதரர்கள் வாழ்க்கை வரலாறு:

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் (Wright brothersஓர்வில் ரைட் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் “ஓர்வில் ரைட்” 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட ரைட் பிளையர் எனும் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.1904, 1905ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப்படுத்தப்பட்டது.

இளமை

மில்டன் ரைட் என்ற ஆங்கிலேய-டச்சுக்காரருக்கும் சுசான் கேத்ரின் என்ற ஜெர்மன்-ஸ்விஸ் பெண்மணிக்கும் பிறந்தவர்கள் ஏழு பேர். அவர்களில் வில்பர் 1867 இண்டியானாவிலுள்ள மில்வில்லே என்ற இடத்திலும், ஓர்வில் ஒஹையோவின் டேட்டன் என்ற இடத்தில் 1871-இலும் பிறந்தனர். இவ்விருவரும் திருமணமே செய்துகொள்ளவில்லை. ரியூச்லின் (1861–1920), லோரின், கேத்தரின் ரைட் (1874–1929), இரட்டையர்களான ஓட்டிசு மற்றும் இடா ஆகியோர் இவர்களது மற்ற குழந்தைகளாவர். இவர்கள் 1870 இல் பிறந்து குழந்தைகளாக இருக்கும்போதே இறந்துவிட்டனர். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

1878 இல் அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். பணிநிமித்தமாக அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவ்வாறு ஒருமுறை அவர்தம் பயணத்தின்போது எலிகாப்டர் பொம்மை ஒன்றை அவ்விரு குழந்தைகளுக்கும் வாங்கிவந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு அப்பொம்மை செய்யப்பட்டிருந்தது. அது உடையும் வரை வில்பரும் ஓர்வில்லும் விளையாடினர், பிறகு அவர்களாகவே அதனை மீளமைத்தனர். அந்தப் பொம்மைதான் தங்களுக்கு பறப்பதற்கான ஆர்வத்துக்கான ஒரு தொடக்கப் பொறியாக இருந்தது என்று பிற்பாடு அவர்கள் தங்கள் அனுபவம் பற்றிச் சுட்டிக்காட்டினர்.

ஆய்வுகளும் பணிகளும்

இரு சகோதரர்களும் உயர்கல்வி வரை பயின்றனர் ஆனால் அதற்கான பட்டயங்கள் எதுவும் பெறவில்லை. 1884 இல் ரைட் குடும்பம் இந்தியானாவிலிருந்து ஒஹையோவிலுள்ள டேட்டனுக்குக் குடிபெயர்ந்தது. இங்கு 1870 வரை இருந்தனர்.

1885 இல் வில்பர் ரைட் ஒருமுறை பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட காயத்தால் தனது முன்பற்களை இழந்தார். அதன்பிறகு அவர் முரட்டுத்தனமானவராக மாறினார். எனவே விளையாடச் செல்லாமல் வீட்டிலிருக்கத் தொடங்கினார். சில வருடங்கள் வீட்டில்ருந்த வில்பர் என்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாருக்கு உதவியாக இருந்தார். அச்சமயம் தனது தந்தையின் நூலகத்தில் இருந்த புத்தகங்களைப் படித்துத் தேர்ந்தார். சில நேரஙக்ளில் தனது தந்தைக்கு உதவியாகப் பிரெத்திரென் சபையில் உதவிகள் செய்தார்.

ஆலிவர் ரைட் தனது படிப்பை இடையில் நிறுத்தி 1889 இல் தனது சகோதரர் வில்பரின் உதவியுடன் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். பிறகு இருவரும் இணைந்து ஒரு வார இதழைத் தொடங்கினார்கள். ‘மேற்கத்திய செய்திகள்’ (West Side News) என்ற பெயரில் வெளிவந்த இவ்விதழுக்கு ஆர்வில் வெளியிடுவோராகவும் வில்பர் ஆசிரியராகவும் இருந்தனர். 1890 இவ்விதழை நாளிதழாக மாற்றி ‘தி ஈவினிங் ஐடெம்’ என்ற பெயரில் வெளியிட்டனர். நான்கு மாதங்கள் வெளிவந்த இவ்விதழ் பிறகு நின்று போனது. அதன்பிறகு வணிக நோக்கிலான அச்சகமாக மாறியது. தனது நன்பர்கள் மற்றும் தன்னுடன் பயின்ற மாணாக்கர்களை தங்களது அச்சகத்தின் வாடிக்கையாளர்களாகப் பெற்றனர். அவர்களில் புகழ்பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரும் எழுத்தாளருமான ‘பால் லாரன்சு டன்பர்’ என்பவரும் ஒருவர். அதன் பிறகு டன்பர் ஆசிரியராகப் பணியாற்றிய ‘டேட்டன் டாட்லெர்'(Dayton Tattler) என்ற வார இதழ் ஒன்றை நீண்ட நாட்கள் அச்சிடட்டனர்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close