Breaking News
Home / பொழுதுபோக்கு / தமிழ் சினிமா வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது.. திரையுலகிலிருந்து ஒரு பகீர் குரல்

தமிழ் சினிமா வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது.. திரையுலகிலிருந்து ஒரு பகீர் குரல்

தமிழ் சினிமா வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது.. திரையுலகிலிருந்து ஒரு பகீர் குரல்

தமிழ் சினிமா வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது.. திரையுலகிலிருந்து ஒரு பகீர் குரல்

சென்னை: தமிழ் சினிமா படு வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. ரஜினி காந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் ஆகியோரது படங்கள் தொடர்ந்து நன்றாக ஓடினால்தான் தமிழ் சினிமாவில் சிரிப்பைப் பார்க்க முடிகிறது. இவர்களுக்குப் பின்னர் சினிமாவின் கதி அதோ கதிதான்.. இதை நாம் சொல்லவில்லை. திரைத் துறையில் பல காலமாக ஊறிப் போயுள்ள ஒருவர் கூறியது இது.

பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரான சங்கிலி முருகனுடைய டீமில் பல காலம் இணைந்து செயல்பட்டவர் இவர் (தனது பெயரைப் போட வேண்டாம் என்று கூறி விட்டதால், போடவில்லை). திரைத்துறையின் பல துறைகளில் நிறைந்த அனுபவம் கொண்டவர்.

சமீபத்தில் அவரை சந்திக்க நேரிட்டபோது, எங்கப்பா இப்பெல்லாம் சினிமா முன்னாடி மாதிரி இல்லை. வெளிப்படையா சொல்லனும்னா இன்னும் கொஞ்ச காலத்துல சினிமாவே அழிஞ்சிரும். இதுதான் எதார்த்தம் என்று கூறி திகலடிக்க வைத்தார். என்னங்க சொல்றீங்க என்று சேரை இழுத்துப் போட்டு கையில் காபியைக் கொடுத்து இன்னும் அவரிடம் டீப்பாக கேட்டபோது அவர் கொட்டியது இது…

குறைந்த போன புதியவர்கள் 

சினிமா தயாரிப்புக்கு இப்போது புதியவர்கள் வருவது கிட்டத்தட்ட இல்லை என்ற நிலை வந்து விட்டது. புதிதாக யாரும் வருவதில்லை. வந்தால் சொத்துக்களைப் பறி கொடுப்பது நிச்சயம். காரணம், யாருக்குமே இங்கு லாபம் கிடைப்பதில்லை.

ரஜினி, கமல், விஜய், அஜீத் மட்டுமே 

ரஜினி, கமல், விஜய், அஜீத் ஆகியோரது படங்களை மட்டுமே சற்று நம்ப முடிகிறது. கைக்கு எப்படியாவது பழுது ஏற்படாமல் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் மற்றவர்களின் படங்களில் இதுபோல எதிர்பார்க்க முடியவில்லை.

நான்கு பேரின் படங்களும் போராடுகின்றன 

இந்த நான்கு பேரின் படங்களுமே கூட கடும் சிரமப்பட்டுத்தான் ஓட வேண்டியுள்ளது. அப்படியே ஓடினாலும் கூட ஏதாவது ஒரு தரப்பு நஷ்டப்படும் நிலையும் உள்ளது. அனைத்துத் தரப்புமே லாபத்தை சம்பாதிப்பது என்பது அரிதிலும் அரிதாகி விட்டது. இங்கு ஈகோ அதிகமாகி விட்டது. விட்டுக் கொடுப்பது இல்லாத நிலை. சங்கங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. மோதல்கள் அதிகமாக உள்ளது.

நடிகர்கள் சம்பளத்தைக் குறைப்பதில்லை 

தயாரிப்புச் செலவு அதிகமாகி விட்டது. நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க தயாராக இல்லை. தயாரிப்புச் செலவும் குறைந்தபாடில்லை. அவரவரும் பணத்தை தக்க வைப்பதில்தான் அக்கறை காட்டுகின்றனர். லாபத்தை அடித்துப் பிடித்து பங்கிட துடிக்கிறார்கள். ஆனால் நஷ்டம் வந்தால் சிதறி ஓடி விடுகிறார்கள். தியேட்டர்களில் கடுமையான அளவுக்கு மக்களிடம் கறக்கிறார்கள். தியேட்டர் கட்டணம் 150 என்றால் கார் பார்க்கிங் கட்ட்டணம் ரூ. 300 ஆக உள்ளது. பிறகு எப்படி தியேட்டருக்கு வருவார்கள்.

ஆன்லைனில் வெளியாகும் புதுப் படங்கள் 

இதுதவிர ஆன்லைனில் புதுப் படங்களை வெளியிடுவதை முன்பை விட அதிகரித்து விட்டது. படம் வெளியாவதற்கு முன்பே கூட ஆன்லைனில் போட்டு விடும் அவல நிலை உள்ளது. இதுதான் தமிழ் சினிமாவை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. முன்பெல்லாம் 100 நாள் ஓடினால் வெற்றி. இப்போது 3 நாள் படம் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடினாலே பெரிது என்ற நிலை உள்ளது.

நல்ல படங்கள் வருவது குறைவு 

தரமான படங்கள் வருவது அரிதிலும் அரிதாகி விட்டது. நல்ல படங்கள் எடுக்க யாரும் தயாராக இல்லை. அப்படி எடுப்பவர்களும் கூட சீக்கிரத்திலேயே காணாமல் போய் விடுகிறார்கள். வெளியில்தான் பலரும் பந்தாவாக வலம் வருகின்றனரே தவிர உள்ளுக்குள் நிலைமை மோசமாகவே இருக்கிறது. முன்னணி நடிகர்கள் இருக்கும் வரை சினிமாவும் இருக்கும். அவர்களும் அரசியல், அது, இது என்று போய் விட்டால் சினிமா கதி அதோ கதிதான் என்று கூறுகிறார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close