Breaking News
Home / ஆரோக்கியம் / பளபளக்கும் சருமத்திற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும்!

பளபளக்கும் சருமத்திற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும்!

பளபளக்கும் சருமத்திற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும்!

பளபளக்கும் சருமத்திற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும்!

தினமும் காற்றில் உள்ள மாசுக்கள் உங்களது முகத்தில் படிவதாலும், முகத்தில் எண்ணெய் வடிவது, துசிகள் படிவது, முகப்பருக்கள், சூரிய ஒளி போன்றவை உங்களது முகத்தில் உள்ள பொழிவை குறைக்கின்றன. என்ன தான் கலராக இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி முகத்தில் ஒரு பொழிவு இருந்தால் அந்த நாளே உங்களுக்கு புத்துணர்ச்சி மிகுந்த ஒரு நாளாக இருக்கும்.

உங்களை காணும் அனைவரும், என்ன இன்று விஷேசம் ரொம்ப அழகா இருக்க… முகம் இப்படி மின்னுதே என்று ஆள் ஆளுக்கு விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி நாழு பேர் விசாரித்தால், உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியாக தானே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த நாளே வெகு சிறப்பாக இருப்பது உறுதி தான்.

இந்த முகப் பொலிவை பெற நீங்கள் பார்லர்களுக்கு சென்று சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டிலேயே எளிய முறையில், மிக குறைந்த செலவில் சில விஷயங்களை செய்வதன் மூலம் வீட்டிலேயே நீங்கள் எளிதாக மிகச்சிறந்த முக பொலிவை பெறலாம்.

1. தேன் மற்றும் பால்

உங்களது முகம் மாசு நிறைந்த காற்றினால் அசுத்தமாவதை தடுத்து, முக பொலிவை பெற தேன் மற்றும் பால் கலந்த கலவையை முகத்திற்கு தடவ வேண்டும். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை போக்கி முகத்திற்கு புது பொலிவை தருகிறது.

2. எண்ணெய் பசை

முகம் பொலிவற்று கிடப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை தான். இது வெளியில் இருக்கும் தூசி, கெமிக்கல்கள் போன்றவற்றை உள் இழுத்து, முகத்தில் பருக்களை தோன்ற செய்யும். இதற்கு சிறிதளவு ரோஸ் வாட்டரில், முல்தாணி மட்டியை கலந்து முகத்திற்கு அப்ளை செய்து, பின்னர் கழுவினால் முகம் எண்ணெய் பசைகள் இன்றி பளப்பளப்பாக இருக்கும்.

3. மஞ்சள், தேன் :

உங்களது சருமம் ஜீவனிழந்து கிடக்கிறதா? அதற்கு ஓட்ஸ், மஞ்சள், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மிருதுவாக ஸ்கிரப் செய்தால், உங்களது முகம் புத்துணர்வு பெரும். ஸ்கின் செல்கள் புதுப்பிக்கப்படும். இது உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பிரகாசிக்க செய்யும்.

4. சோர்ந்த முகம்

என்ன தான் மேக்கப் செய்து அழகை மேம்பட செய்தாலும், முகத்திற்கு ஒரு பவுடர் கூட போடாமல் முகத்தை மிளிர செய்வது தான் உண்மையான அழகாகும். சோர்ந்த, சில இடங்களில் கருப்பு கருப்பாக உள்ள சருமத்திற்கு எலுமிச்சை சாறு, தேன், கற்றாளை ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு மசாஜ் செய்து, வெதுவெதுப்பாக உள்ள நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது முகத்திற்கு சிறந்த பொழிவை தரும்.

5. சந்தனம் 

சந்தனம் முகத்திற்கு குளிர்ச்சியை அளித்து, முகப்பருக்களை போக்கும் தன்மை கொண்டது. சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close