Breaking News
Home / வரலாறுகள் / மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு

மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு

மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு

மைக்கேல் ஃபாரடே வாழ்க்கை வரலாறு:

மிக மோசமான குடும்பத்திலிருந்து வந்த மைக்கேல் பாரடே, வரலாற்றில் மிகப் பெரிய விஞ்ஞானிகளில் ஒருவராக ஆனார். விசேஷமான குடும்பங்களுக்கு பிறந்த மக்களை அறிவியல் பாதுகாக்கும் போது அவருடைய சாதனை குறிப்பிடத்தக்கது.

1791ம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி லண்டன் அருகில் உள்ள Newington நகரில் பிறந்தார் Michael Faraday. இவரது தந்தை James Faraday ஆவார். மைக்கெல் ஃபேரடே ஆரம்பக் கல்வியை மட்டுமே பள்ளியில் கற்றார். பின் குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லமுடியவில்லை.

Faradayவின் தந்தை அவரை ஒரு புத்தக விற்பனையகத்தில் பயிற்சியாளராக வேலைக்குச் சேர்த்துவிட்டார். அங்கு தொடர்ந்து 7 ஆண்டுகள் பணிபுரிந்த Faraday இயற்பியல், வேதியியல் மற்றும் மின்சாரம் குறித்து பல்வேறு புத்தகங்களை படித்தார்.

1812ம் ஆண்டு தன் 20 வயதில் ஆங்கில வேதியியல் ஆராய்ச்சியாளர் Humphry Davy நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்றார். Royal Institute ல் நடந்த அந்த பயிற்சி வகுப்பின்போது Humphry Davy கூறிய தகவல்களை குறிப்பெடுத்துக்கொண்ட Faraday அதை Davyக்கு அனுப்பிவைத்தார். அதே நேரத்தில் தனக்கு உதவியாள் தேவைப்பட்டதால் டேவி, Faradayவை தன்னுடன் சேர்த்துக்கோண்டார்.

1813ம் ஆண்டு Royal Instituteல் உதவி ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். 1813-15ம் ஆண்டுகளில் டேவி ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பயணம் செய்ய திட்டமிட்டு Faradayவையும் உடன் அழைத்துச்சென்றார். அப்போது Scientific Elite of Europeல் உறுப்பினரானார்.

1821ஆம் ஆண்டு Sarah Barnard என்பவரை திருமனம் செய்துகொண்டார். அதன் பின் Church of Scotlandல் சிறிது காலம் ஊழியம் செய்தார். 1800களில் Allassandro Voltaவினால் Battery கண்டுபிடிக்கப்பட்டது. மின்சாரம் பாயும் போது அதை சுற்றி காந்த புலம் இருக்கும் என்பதை கண்டுபிடித்தார் Hans Christian Orsted. இவர்களது கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்ப்பட்டு தொடர்ந்து அத்துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார் Faraday.

ஒரு முறை மின்கம்பி ஒன்றை பாதரசம் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் மூழ்கச்செய்து அதன் அருகில் ஒரு காந்தமும் வைக்கப்பட்டு அந்த கம்பியில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. அப்போது அந்த மின்கம்பி காந்தத்தை சுற்றிச் சுழன்றது. அதன் மூலம் காந்தப்புலம் வட்ட வடிவில் உருவாவதை கண்டுபிடித்தார். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே மின் மோட்டாரையும் கண்டுபிடித்தார் Faraday. மின் சக்தியை Mechanical Energy ஆக மாற்றும் திட்டத்தை உலகிற்கு காட்டினார்.

அதே போல Faraday’s Shield எனப்படும் மின்காந்தப்புலத்தை கட்டுப்படுத்தும் வழியையும் கண்டுபிடித்தார். நாம் இடி மின்னலின் போது கார், பஸ் போன்ற வாகனங்களில் பயணம் செய்தோம் என்றால் அந்த வாகனம் மின்னலின் மூலம் எற்படும் மின்சாரத்தை உள்ளே விடாமல் தடுக்கிறது. இது Faraday’s Shieldயை பயன்படுத்துவதன் மூலம் தான் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் Royal Institiute of Londonல் இருக்கும் போது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் உதவியுள்ளார். கலங்கரை விளக்கங்களில் பயன்படுத்துவதற்காக Optical Glassஐ கண்டுபித்தார்.

கடல் அறிப்பால் கப்பல்கள் சேதமடைவதை தடுப்பதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். Royal Instituteன் தலைவராகவும் இருந்துள்ள Faraday நரம்பு மண்டல பாதிப்பால் சில காலம் பாதிக்கப்பட்டார். 1853-1856ம் ஆண்டு க்ரீமியா போரில் உதவி செய்ய British அரசாங்கத்தால் அழைக்கப்பட்ட போது அதை faraday மறுத்துவிட்டார். 1867ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தன் 75வது வயதில் Hampton Court அருகே காலமானார்.

நவீன உலகின் மிக முக்கியமான விஞ்ஞானியாக கருதப்படும் Michael Faradayவுக்காக Newtonனின் நினைவிடத்திற்கு அருகிலேயே ஒரு நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கான சிலைகளும், அவரது பெயரில் பல கல்லூரி வளாகங்களும் உலகின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு தெருக்களுக்கு இவரது பெயர் சூட்டப்படுள்ளது. Bank Of England இவரது புகைப்படத்துடன் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து பெருமைபடுத்தியுள்ளது., Faraday Institute for Science & Religion என இவரது நினைவாக ஆராய்ச்சி கழகம் இன்றும் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close