Breaking News
Home / வரலாறுகள் / மேரி க்யூரி அம்மையார் வரலாறு

மேரி க்யூரி அம்மையார் வரலாறு

மேரி க்யூரி அம்மையார் வரலாறு

மேரி க்யூரி அம்மையார் வரலாறு

மேரி க்யூரி அம்மையாரின் பெற்றோர் இட்ட பெயர் மரியா ஸ்க்லோடோஸ்கா (Maria Sklodowska ). இவர் 1867ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ம் தேதி, ஒருசமயம் போலந்தின் தலைநகராக இருந்த வார்சாவில் பிறந்தார். இவரின் தந்தை போலிஷ் கருத்துகளின் ஆதரவாளராக (pro-Polish beliefs) இருந்ததால் ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் குடும்பம் நிதிப் பற்றாக்குறையினால் மிகவும் அவதிப்பட்டது.

மரியாவின் பெற்றோர்கள் ஆசிரியர்களானதால் தங்கள் ஐந்து குழைந்தைகளுக்கும் படிப்பின் அவசியத்தைக் கற்றுத்தந்தனர். 11வயது அடையும் முன்னரே தன்னுடைய தாயாரையும் மூத்த ச்கோதரியையும் மரியா இழந்தார். இருந்தபோதிலும் மரியா 15வது வயதில் படிப்பில் சிறப்பாகத் தேறினார், ஆனால் நரம்புத் தளர்ச்சியால் அவதிப்பட்டார். அதனால் அவருடைய தகப்பனார், கிராமத்து சூழ்நிலை மரியாவிற்கு நிம்மதியும் ஒய்வும் கொடுக்கும் என்று நினைத்து, மரியாவை கிராமத்திற்கு அனுப்பினார்.

சிறிது உடல் நிலை தேறியதும் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரை வார்சாவிற்கு இழுத்தது. பெண்கள் வார்சா சர்வகலாசாலையில் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது. ஆகையால் மரியாவும் மூத்த சகோதிரி ப்ரோன்யாவும் “floating universityயில் சேர்ந்தனர். பாடங்கள் இரவில் தான் நடக்கும். மேலும் போலீஸ் கண்ணில் படாமலிருக்க வகுப்பு நடக்கும் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்களாம்.

மரியாவும் ப்ரோனியோவும், வேலை பார்க்க விரும்பினால் floating university படிப்பு போதாது. மேற்கு ஐரோப்பவிலுள்ள பெரிய சர்வகலாசாலையில் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்பதை அறிந்திருந்தார்கள். படிப்பதற்கு வேண்டிய பணம் திரட்ட சகோதிரிகள் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி மரியா ஆயாவாக (governess) வேலை செய்து ப்ரோனியாவின் மருத்துவப் படிப்பிற்கு பண உதவி செய்ய வேண்டுமென்றும். ப்ரொனியா சம்பாதிக்க ஆரம்பிததும் அவள் மரியாவின் படிப்பிற்குப் பண உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

மேரி க்யூரி பிறந்த இடம்

மரியா வார்சாவிலிருந்து 150 கி.மீ. தூரத்திலுள்ள கிராமத்தில் ஒரு சர்க்கரைத் தொழிற்சாலை அதிபர் வீட்டில் குழைந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் வேலையில் அமர்ந்தாள். அவர் மூன்று வருடங்கள் வேலையில் இருந்தார். ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம் கணிதம், பௌதிகம், வேதியல் இவைகளைப் படிப்பார். இரஷ்ய அரசாங்கம் போலிஷ் மக்கள் (Poles) அறிவியல் ஆராய்ச்சி (laboratory Science) கற்றுக்கொடுப்பதைத் தடை செய்திருந்தது. ஆனால் சர்க்கரைத் தொழிற்சாலையில் இருந்த சோதனைக் கூடத்து அதிகாரி மரியாவிற்கு சில பாடங்கள் கற்றுக்கொடுத்தார்.

மரியா 1889ஆம் வருடம் வார்சாவிற்குத் திரும்பினார். இப்பொழுது அவருடைய தகப்பனார் நல்ல சம்பாத்தியத்தில் ஒரு சீர்திருத்தப் பள்ளியில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரும் ப்ரோனியவின் படிப்பிற்குப் பணம் அனுப்ப முடிந்தது. மேலும் இரண்டு வருடங்கள் மரியா ஆயாவாகவும், ட்யூடராகவும் பணிபுரிந்தார். அவருக்கு 24 வயது. தான் பாரிஸில் சர்வகலாசாலையில் சேர்ந்து படிக்கப் போதுமான பணம் சேர்த்துவிட்டதை உணர்ந்தார். 1891-ல் பாரிஸ் வந்து சேர்ந்தார். மரியா தன் தகப்பனார், மற்றும் பிறந்த தேசத்தை மட்டும் விட்டு விட்டு வரவில்லை, தன் பெயரையும்தான். சர்வகலாசாலையில், ஃப்ரென்ச் மொழியில் மரியாவை மேரி என்று பதிவு செய்துகொண்டார். மற்ற சக மாணவர்களைப் போலத் தன்னைத் தயார்ப் படுத்திக்கொள்ளவில்லை எனினும் கடினமாக உழைத்து மூன்றே வருடங்களில் கணிதம், பௌதிகம் இவை இரண்டிலும் மாஸ்டர் பட்டம் பெற்றுவிட்டார். மேரி அவர்களுக்கு, பௌதிகத்தில் அவருடைய சிறந்த பணிக்காக, ஸ்காலர்ஷிப் (scholorship) கிடைத்தது.

Society for the Encouragement of National Industry இவர் பல்வேறு தரப்பட்ட எஃகுகளின் காந்த குணத்தை (magnetic properties of different steels) ஆராயப் பணம் கொடுத்தது. இந்த ஆராய்ச்சியை நடத்த அவருக்கு ஒரு ஆய்வுக் கூடம் தேவைப்பட்டது.

பியரி க்யூரி என்பவர் ஒரு ஆய்வுக் கூடம் வைத்திருந்தார். ஆகையால் க்யூரிக்கு மேரி 1894ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். தன் ஆய்வுக்கூடத்தில் வசதிகள் குறைவாக இருந்தபோதிலும் மேரியை ஆராய்ச்சி நடத்த அனுமதித்தார். மேரியை விட 10 வயது மூத்தவரான க்யூரி காந்தம் மற்றும் படிகக்கல் பற்றியும் அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடித்திருந்தார். ஆனால் அதைப்பற்றிக் கட்டுரை எழுதி (Doctoral Thesis) பூர்த்தி செய்யக் கவலைப்படவில்லை. பியரி, மேரி நட்பு ஆழமாகியது. போலந்து திரும்பிச் செல்வதை மறந்து பாரிஸிலேயே அறிவியல் படிப்பைத் தொடர வேண்டும் என்று பியரி, மேரிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். மேரியும், பதிலுக்கு, பியரி டாக்டர் பட்டம் (பி.எச்.டி) பெற, அவர் கண்டுபிடிப்புகளை எழுத நம்பிக்கை தந்தார்.

மேரி, பியரியை 1895ஆம் ஆண்டில் மணந்தார். தொடர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள் எஃகுகளுடைய குனாதிசயங்கள் பற்றிய ஆராய்ச்சியின் முடிவை 1897ல் வெளியிட்டார். செப்டெம்பர் 1897ல் அவர் ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு Irene என்று பெயர் சூட்டினர். இதன் பிறகு தனக்கு டாக்டர் பட்டம் பெற்றுத்தரக்கூடிய ஆராய்ச்சிக்கான கருவூலத்தைத் (Topic) தேடினார்.

1895ல் Roentgen என்பவர் X-ray கதிர்களைக் கண்டுபிடித்தார், Henry Becquerel என்பவர் யுரேனியத்தை உள்ளடக்கிய கனிப்பொருள் ஒரு விதக் கதிர்களை வெளியிடுகிறது என்று கண்டுபிடித்தார். மற்ற விஞ்ஞானிகள் X-Rayல் கவனம் செலுத்தினார்கள், ஆனால் Becquerelஇன் கண்டுபிடிப்பைப் புறக்கணித்துவிட்டனர். மேரியோ யுரேனியக் கதிர்களைப் பற்றி மேலும் ஆராய முற்பட்டார்.

மேரி, யுரேனியத்தைக் கொண்ட பல வகையான இரசாயனக் கலவைகளை (chemical compounds) ஆராய்ந்தார். இதனால் அவர், வெளிப்படும் கதிர்களின் வீரியம் (strength) இரசாயனக் கலவையில் உள்ள யுரேனியத்தின் அளவைப் பொருத்தது என்று கண்டுபிடித்தார். மேலும், வெளிப்படும் கதிர், கலவையின் தன்மை அதாவது, திடமோ, பொடியோ, உலர்ந்ததோ, ஈரப்பதத்தையோ, சுத்தமான அல்லது கலப்படமான கலவையையோ, பொருத்தது இல்லை என்றும் அறிந்தார் (It had nothing to do with whether the material was solid or powdered, dry or wet, pure or combined with other chemical elements). ஒரு குறிப்பிட்ட அளவு யுரேனியம், குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட யுரேனியம் அணுக்கள் இருந்தால் வேண்டிய கதிர் வீச்சு கிடைக்கும். மற்றவை எதுவும் மாறுதல் ஏற்படுத்தவில்லை என்றும் அறிந்தார் (If you had a certain amount of uranium, a certain number of uranium atoms, then you got a certain intensity of radiation. Nothing else made a difference.)

கதிர் வீச்சின் பெரும் ரகசியம்

யூரேனியம் கதிர்களை மின்சாரத்தை அளக்கும் கருவியின் அருகாமையில் செலுத்தினால், அந்தக் கருவியின் முள் (pointer) அசைந்தது. பியரி க்யூரி 15 வருடங்களுக்கு முன் கண்டுபிடித்த அளக்கும் கருவி கொண்டு ஆராய்ச்சி செய்தார். இந்த ஆராய்ச்சியில் “தோரியம்” கூட இதே கதிர்களை வெளிப்படுத்தின எனபது தெரிந்தது. மேலும் பிட்ச்ப்லெண்ட் (Pitchblende) என்னும் கனிப்பொருள் யுரேனியம், தோரியம் இவற்றை விட அதிகக் கதிர் இயக்கம் (RADIO ACTIVITY) உடையது என்று கண்டுபிடித்தார். தன் மனைவின் கண்டுபிடிப்பால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பியரி அவளுடைய ஆராய்ச்சியில் தானும் கலந்து கொண்டார்.

பிட்ச்ப்லென்ட்டில் உள்ள எந்தப் பொருள் (element) அதிகக் கதிர் இயக்கம் கொண்டது என்று கண்டறிய, அதனுள் அடங்கியுள்ள பொருட்களைப் பிரித்தெடுக்க முயன்றனர். அந்த முயற்சியில் அவர்கள் கண்டறிந்தது கதிர் இயக்கம் கொண்ட இரண்டு புதிய பொருட்கள். அவைகளுக்கு அவர்கள் இட்ட பெயர்கள் “பொலோனியம்” (Polonium) மற்றும் “ரேடியம்” (Radium). தன் தாய் நாட்டை கௌரவிக்கும் வகையில் “பொலோனியம்” என்றும், லத்தீன் மொழியில் ஒளிக் கதிர் என்று பொருள் கொண்ட “ரே” (ray) என்ற பதத்திலிருந்து ரேடியம் என்றும் பெயரிட்டனார். பொலோனியம், பிஸ்மத் (Bismuth) போலவும், ரேடியம் பேரியம் (Barium) போலவும் செயல்பட்டன.

சுத்தமான ரேடியத்தைப் (Pure Radium) பிரித்தெடுக்க மேரி 11 வருடங்கள் பாடுபட வேண்டியிருந்தது, சுத்தமான பொலோனியம் எடுக்க முடியவில்லை, ஏனென்றால் அது வெகு சீக்கிரமாக சிதைந்து விடுகிறது (because it decays very rapidly).

இந்த ஆராய்ச்சியினால் மேரி, பியரி இவர்களின் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதற்குக் காரணம், கடினமான உழைப்பா, அல்லது ரேடியம் கதிர் இயக்கத்தின் விளைவா?

1903ல் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையை முடித்து Doctrate பட்டம் பெற்றார். பிரான்ஸில் doctrate பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவர்தான்.

அந்த வருடம் (1903) மேரி, பியரி க்யூரிக்களுக்கு (கதிர் இயக்கத்தையும், அதை வெளிப்படுத்தும் பொருட்களைக் கண்டுபிடித்தற்காக (for the discovery of radioactivity and new radioactive elements.) இயற்பியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. இவர்கள் உடல் நிலை காரணமாக 1905 வரை ஸ்வீடன் சென்று சொற்பொழிவு ஆற்றிப் பரிசினைப் பெறமுடியவில்லை

1906ல் பியரி க்யூரி காலமானார். 1934-ம் வருடம் ஜூலை மாதம் 4ஆம் தேதி மேரி க்யூரி காலமானார்.

ரேடியம் வெளிப்படுத்தும் காமா கதிர்கள் (Gamma rays) புற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படுகின்றன. அதைத் தவிர வெளிச்சத்தில் பிரகாசிக்ககூடிய பெயிண்ட்கள் (Luminescent paints) தயாரிக்கவும் உபயோகப்படுகின்றன.

Radium:

Chemical Properties

Electrochemical Equivalent: 4.2165g/amp-hr
Electronegativity : 0.9
Heat of Fusion: 37kJ/mol

 

Physical Properties

Atomic Mass Average: 226.0254
Boiling Point: 1809K 1536°C 2797°F
Density: 5.5g/cc @ 300K
Description: Silver white metal. Intensely radioactive.
Enthalpy of Atomization: 163 kJ/mole @ 25°C
Heat of Vaporization: kJ/mol
Melting Point: 973K 700°C 1292°F
Pysical State (at 20°C & 1atm): Solid
Specific Heat: 0.12J/gK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close