Breaking News
Home / ஆரோக்கியம் / நீங்க ஒரு நிமிஷத்துல எத்தனை முறை சுவாசிக்கிறீங்க? மூச்சிலே இருக்கு உங்கள் ஆயுள் ரகசியம்!!

நீங்க ஒரு நிமிஷத்துல எத்தனை முறை சுவாசிக்கிறீங்க? மூச்சிலே இருக்கு உங்கள் ஆயுள் ரகசியம்!!

நீங்க ஒரு நிமிஷத்துல எத்தனை முறை சுவாசிக்கிறீங்க? மூச்சிலே இருக்கு உங்கள் ஆயுள் ரகசியம்!!

நீங்க ஒரு நிமிஷத்துல எத்தனை முறை சுவாசிக்கிறீங்க? மூச்சிலே இருக்கு உங்கள் ஆயுள் ரகசியம்!!

எண்ணும் எண்ணங்களும், செய்யும் செயல்களும், நாம் சுவாசிக்கும் காற்றோடு தொடர்புடையது என்று யாரேனும் சொன்னால், நாம் என்ன சொல்வோம்?

மனதின் நினைவுகளும், நிகழ்கால மனநிலையும், நாம் சுவாசிக்கும் காற்றாலே உண்டாகிறது என்றால், என்ன செய்வோம்?

‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!’ என்று மனித உடலைப்பற்றி பாடினார், பட்டினத்தார். அது தத்துவம்! ஆயினும், உண்மையும் அதுதானே! ‘உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!’ என்றார், திருமூலர்.

உள்ளத்தில் உள்ள உற்சாகம், முகத்தில் உள்ள பொலிவு, உடலில் உள்ள வலிமை, இவை அனைத்துக்கும் காரணம், நாம் சுவாசிக்கும் காற்றே என்றால், என்ன நினைப்போம்? அதைப் பற்றி சற்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

உயிர் காற்று!

இந்த உலகில் உள்ள ஒரு செல் உயிரினம் முதல், ஆறறிவு படைத்த மனித இனம் வரை, அனைவரின் வாழ்க்கைக்கும், தேவையானது காற்று! பேரண்டப் பரவெளியில், மனிதர் உயிர் வாழத்தேவையான பிராண வாயு காற்று நிரம்பிய ஒரே கோளாக இன்றுவரை, நாம் வாழும் பூமியே, அறியப்பட்டு வருகிறது.

நமக்கு அத்தியாவசியமான ஒன்று, எங்கும் நிறைந்து நம்மைக்காத்து வருகையில், அதை நாம், அவற்றின் கடமை என்று கருதி, அதன் மகத்துவம் உணராமல், உதாசீனம் செய்வோம் அல்லவா?

இப்படித்தான், நாம் இயற்கையின் மூலம் அனிச்சையாக பெறும் அரிய பலன்களை மறந்து, அதெல்லாம் அவற்றின் கடமை என எண்ணி, நாம் ஏதேதோ செயல்களில் நாட்டம் செலுத்துகிறோம்! இயற்கை நமக்கு அளிக்கும் நல்லவையையே உணர முடியாத நமக்கு, எப்படி மூச்சு விடுதலின் தன்மை குறித்த அக்கறை இருக்கும்?

என்றேனும் ஒரு நாள், நம் மூச்சை ஆராய்ந்திருக்கிறோமா?

மூச்சிலே இருக்குது நம் ஆயுள்!

மனிதன் தினமும் அனிச்சையாக செய்யும் செயல்களில் ஒன்று, மூச்சு விடுதல், சுவாசித்தல்! இவை இரண்டும் தானாகவே, தடைகளின்றி நடந்து வரும்.
மேலும், ஜலதோச நேரத்தில் மூக்கடைப்பு காரணமாக, வாய் வழியே மூச்சு விடுவோம். எதற்கு இத்தனை சிரமப்பட்டு, வாயின் வழியே மூச்சு விட வேண்டும்? சற்றுநேரம் நிறுத்திவிடலாமே!, மூக்கு சரியானதும், மூக்கின்வழியே மீண்டும் சுவாசித்துக்கொள்ளலாமே!, என்ன சரிதானே!

இப்படி எழுதி இருப்பதைப் படித்ததும், எத்தனை பேர் பதறி இருப்போம், எத்தனை பேர், திட்டி இருப்போம், மூளை இல்லாமல், மூச்சை நிறுத்தி வைக்க சொல்கிறார்களே, என்று! நினைக்கவே, நடுங்குகிறது அல்லவா!

உயிர் மேல் உள்ள பற்றோ அல்லது வேறு ஏதோ, எழுதியதைப் படித்தவுடன், ஒரு வினாடி, நமது சிந்தனை, உயிரைப் பற்றி எண்ணுகிறதா? நல்லது, இருக்கட்டும், ஆயினும், மூச்சை நிறுத்தச் சொன்னதால் தானே, இந்த சிந்தனை!

தினமும் நாம் சாப்பிட்டாலும், இல்லையென்றாலும், தண்ணீர்தாகம் எடுத்து நீர் பருக முடியாமல் இருந்தாலும், நாம் மூச்சுவிடுவதையும், சுவாசிப்பதையும், செய்துகொண்டுதான் இருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்ப்பதில்லை, சொல்லப்போனால், அது ஒரு பெரியகாரியமாக, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்பதே, உண்மை.

மூச்சுக் காற்று, என்ன செய்கிறது உடலில்?

உடலில் சுவாசமே, பிரதானம், அதைச்சார்ந்தே, உடல் உறுப்புகள் இயங்கும். சுவாசத்திற்கு அடிப்படையான காற்று, மூக்கின்வழியே உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டைவழியே, நுரையீரலை சென்றடைகிறது. நுரையீரலே, உள்ளேவரும் காற்றை, அதன் நுண்ணிய காற்றுப்பைகளுக்கு அனுப்பி, ஏற்கெனவே உள்ள சுத்திகரித்தபின் எஞ்சிய காற்றை, திருப்பி மூச்சின் வழியே, வெளியேற்றும்!.

நுரையீரலின் பைகளில் உள்ள காற்று, இரத்தக்குழாய்களின் வழியே, உடலில் பரவும், இதன்மூலம் காற்றிலுள்ள பிராணவாயு எனும் ஆக்சிஜன், செல்களில் சேமிக்கப்பட்டு, உடலின் இயக்கத்தில் வெளியாகும் கார்பன், மூச்சுக்காற்றின் வழியே, வெளியேற்றப்படுகிறது. இதுவே, உடலில் சுவாசிக்கப்படும் காற்றின் செயல்களாக, நாம் அறிந்துகொள்ள வேண்டியவை!.

இந்த செயல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நாம் இந்த காற்றை சுவாசிக்க எவ்வளவுநேரம் எடுத்துக்கொள்கிறோம் என்று தெரியுமா? அதை அறிவதன் மூலம், நமது ஆயுளை அறியலாம், என்பதையும் நாம் அறிவோமா?

ஒரு நிமிடத்தில் எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்?

மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் எண்ணிக்கை, ஒரு நிமிடத்துக்கு சராசரியாக பதினைந்து என்ற அளவில் இருந்தால், நூறு ஆண்டுகள் வரை வாழலாம், என்று சித்தர்கள் உரைத்துள்ளனர். நிமிடத்திற்கு பதினெட்டு முதல் இருபது என்ற அளவில் சுவாசித்தால், எழுபது ஆண்டுகள் முதல் எண்பது ஆண்டுகள்வரை உயிர்வாழலாம்.

இதுவே இன்றைய மனிதர்களின் சராசரி மூச்சின் அளவாகும். மூச்சு எண்ணிக்கை குறையக்குறைய, ஆரோக்கியம் கூடும், ஆயுளும் அதிகரிக்கும் என்பதே, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close