Breaking News
Home / பொழுதுபோக்கு / எங்களைத் தாண்டி தொடுங்க..- மெர்சல் பிரச்னையில் கைகோர்த்த தல-தளபதி ரசிகர்கள்!

எங்களைத் தாண்டி தொடுங்க..- மெர்சல் பிரச்னையில் கைகோர்த்த தல-தளபதி ரசிகர்கள்!

எங்களைத் தாண்டி தொடுங்க..- மெர்சல் பிரச்னையில் கைகோர்த்த தல-தளபதி ரசிகர்கள்!

எங்களைத் தாண்டி தொடுங்க..- மெர்சல் பிரச்னையில் கைகோர்த்த தல-தளபதி ரசிகர்கள்!

சென்னை : தமிழ் சினிமாவின் மாஸ் கலெக்‌ஷன் டேக்கர்ஸ் விஜய், அஜித் தான். இவர்களது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு சொல்லித் தெரியவேண்டியது இல்லை. இரு நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டு படத்தை ஹிட் ஆக்குவார்கள்.

சமூக வலைத்தளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்குள் எப்போதும் ஒரு சண்டை இருந்துக்கொண்டே இருக்கும். யார் படம் அதிக வசூல் என்பதில் தொடங்கி காரணமே இல்லாமல் அடித்துக்கொள்வார்கள்.

தற்போது பா.ஜ.க-வின் தமிழக நிர்வாகிகள் மெர்சல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

ஒன்று சேர்ந்த அஜித் ரசிகர்கள்

பா.ஜ.க-வினர் நடிகர் விஜய்க்கும், இயக்குநர் அட்லீக்கும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதனால், குறிப்பிட்ட வசனங்களை நீக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இதை விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்க்க, அஜித் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு சமூக வலைதளங்களில் ‘மெர்சல்’ படத்துக்கு தங்கள் ஆதரவைக் கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close