Breaking News
Home / செய்திகள் / மனிதன் செய்த மிக மோசமான துரோகங்கள் எவை என்று தெரியுமா ? உறைய வைக்கும் உண்மைகள்!!

மனிதன் செய்த மிக மோசமான துரோகங்கள் எவை என்று தெரியுமா ? உறைய வைக்கும் உண்மைகள்!!

மனிதன் செய்த மிக மோசமான துரோகங்கள் எவை என்று தெரியுமா ? உறைய வைக்கும் உண்மைகள்!!

மனிதன் செய்த மிக மோசமான துரோகங்கள் எவை என்று தெரியுமா ? உறைய வைக்கும் உண்மைகள்!!

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் போதிருந்து பட்டாசுகளை வெடிக்காதீர்கள் காற்று மாசுபடுகிறது என்று ஒரு கூட்டம் கிளம்பும் அவர்கள் வரும் ஒவ்வொரு வண்டியின் புகையுமே காற்றை பெரும்பளவு மாசு படுத்திடுக்கொண்டிருக்கும்.

மற்ற நாட்களில் எல்லாம் எதுவுமே தெரியாமல் பண்டிகை நாட்களில் மட்டும் எப்படி சட்டென இப்படி மாறிடுகிறார்களோ தெரியவில்லை. இயற்கையை அளவுக்கு மீறி சுரண்டும் போது அதன் சீற்றம் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருக்கும்.

சுனாமி, பூகம்பம்,மழை வெள்ளம்,புயல் போன்றவை வந்தால் தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் யோசிக்க முடிகிறதே தவிர வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் இன்றளவும் பிடிபட வில்லை. இப்படியிருக்கையில் மனிதனால் இயற்கைக்கு எப்படிப்பட்ட கேடுகள் எல்லாம் நடந்திருக்கிறது ஒவ்வொன்றும் எவ்வளவு பெரிய பாதிப்பாக இருக்கிறது என்று பாருங்கள்.

கிங்க்ஸ்ட்டன் ஃபோசில் ப்ளாண்ட் : 

சுமார் 84 ஏக்கர் பரப்பளவில் திட குப்பைகள் சாம்பல் நிறத்தில் வெளியேறியது. இது நடைப்பெற்றது 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி. ரொவ்னே நாட்டில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் ஏக்கர் கணக்கிலான இடம் நாஸ்தியானது.

எண்ணெய் : 

1989 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி இரண்டு லட்சத்து அறுபதாயிரம் பேரல்கள் முதல் 7 லட்சத்து ஐம்பதாயிரம் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெய் அலஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுண்ட் என்னுமிடத்தில் எக்சஸன் வால்டெஸ் என்ற கப்பலிருந்து கொட்டியது.

மனிதன் ஏற்படுத்தியதிலேயே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது இது என்று கூட சொல்லலாம். ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. சுமார் 2800 ஏக்கர் வரை கடல் மாசடைந்தது.

பசிபிக் கடல் : 

மனிதர்கள் ஏற்படுத்திய மாசு என்றே சொல்லலாம். மனிதர்கள் பயன்படுத்தி தூக்கியெறிந்த ப்ளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல்கள்,என பல கிலோமீட்டர் தூரம் கடல் நீரே தெரியாத அளவிற்கு ப்ளாஸ்டிக் பொருட்கள் மிதந்தன.

ஜிலின் கெமிக்கல் : 

நவம்பர் 13 2005 ஆம் ஆண்டு ஜிலின் கெமிக்கில் ப்ளாண்ட்டில் வெடி விபத்து நிகழ்ந்தது. சீனாவில் இருக்கும் இந்த பெட்ரோ கெமிக்கல் ப்ளாண்டில் நடந்த வெடிவிபத்தினால் அங்கு பணியாற்றிய ஆறு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

அதோடு பத்தாயிரத்திற்கும் மேற்பப்ட்ட மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து கொண்டு இடம் பெயர்ந்தனர். இந்த வெடிவிபத்தினால் அருகில் இருந்த சொங்குவா என்ற ஆறு பயங்கரமாக மாசடைந்தது. சுமார் 100 டன் அளவில் கெமிக்கல்கள் ஆற்றில் கலந்தன.

கேஸ்டில் ப்ராவோ : 

கேஸ்டில் ப்ராவோ என்பது ஒரு ரகசிய குறியீட்டின் பெயர். அமெரிக்காவின் முதல் தெர்மோநியூக்கிளியர் ஹைட்ரஜன் பாமின் பெயர். மார்சல் தீவில் இருக்கும் பிகின் அடோல் எனுமிடத்தில் குண்டு போடப்பட்டது. போடப்பட்ட ஆண்டு 1954,மார்ச் ஒன்றாம் தேதி. இதனை அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய அணுஆயுத சோதனை என்றே சொல்லலாம். இதனால் வெகு காலம் அங்கு கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது.

த்ரீ மைல் தீவு : 

அணு ஆயுத விபத்து இது. பென்சல்வேனியாவில் இருக்கும் டவ்பின் அருகில் உள்ள த்ரீ மைல் தீவில் அணு ஆயுத பரிசோதனைக்கூடம் நடந்திருக்கிறது. அங்கு நடைப்பெற்ற விபத்து தான் அமெரிக்காவில் நடைப்பெற்ற மிக மோசமான அணு ஆயுத விபத்து என்று சொல்லலாம்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close