Breaking News
Home / ஆரோக்கியம் / வாழை இலைக் குளியல் செய்து வந்தா 100 வயசு வரைக்கும் வாழலாமாம்!! சித்தர் வாக்கு!!

வாழை இலைக் குளியல் செய்து வந்தா 100 வயசு வரைக்கும் வாழலாமாம்!! சித்தர் வாக்கு!!

வாழை இலைக் குளியல் செய்து வந்தா 100 வயசு வரைக்கும் வாழலாமாம்!! சித்தர் வாக்கு!!

வாழை இலைக் குளியல் செய்து வந்தா 100 வயசு வரைக்கும் வாழலாமாம்!! சித்தர் வாக்கு!!

தமிழர் வாழ்வோடு இணைந்த வாழை இலை இல்லாமல், நம் முன்னோர் அன்று உணவே உண்ண மாட்டார்கள், வீட்டில் உள்ள தாய்மார்களும், வாழை இலை இல்லாமல் உணவை, யாருக்கும் பரிமாற மாட்டார்கள். வாழை இலையில் தினமும் உண்டு வர, நோய் நொடிகளின்றி நூறாண்டு காலம் வாழலாம் என்பர்.

தமிழர்களின் சில பாரம்பரிய வழக்கங்களின் நல்ல தன்மையைப் போற்ற, வாழையடி வாழையாக இருந்து வரும் பழக்கம் என்பர். இப்படி தமிழர் வாழ்வில் உணவிலும், பண்பாட்டிலும் ஒன்றெனக் கலந்ததுதான், வாழை இலை!

முக்கனிகளில் ஒன்றாக பழந்தமிழர் கொண்டாடிய வாழை மரம், தான் வளரும் இடத்தில் தன்னைச் சுற்றி சிறிய வாழை மரங்களைத் தானாகவே உருவாக்கிக் கொள்ளும், காய், கனி, பூ, தண்டு, வேர்க் கிழங்கு என்று அனைத்தையும் மனிதர்க்கு அளித்து, அவர்களின் வாழ்வைக் காக்கும் அதிசய மரம், அத்தகைய அதிசய மிக்க வாழை மரத்தின் சிறப்புகளில் உன்னதமானது, வாழை இலை.

சங்கத் தமிழ்க் கவிஞர்களில் இருந்து, பாவேந்தர் முதல் கவியரசு வரை அனைத்து கவிஞர்களும் வாழை இலையின் வளங்களைப் புகழ்ந்து, பாடல்கள் இயற்றியிருக்கின்றனர்.இத்தகைய அரும் பெருமைகள் கொண்ட வாழை இலை, நாம் சாப்பிடும் உணவை நச்சுக்களில் இருந்து காத்து, நல்ல சத்துக்களை உடலில் சேர்த்து, கண் பார்வையை சீராக்கி, இள நரையை போக்கி, நம் உடல் நலம் பேணுவதோடு மட்டும் நின்று விடாமல், அனைத்து வகைகளிலும் நமக்கு நன்மைகள் செய்கிறது.

சித்தர்களின் கண்டுபிடிப்பு :

இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதன் மூலமே, தற்கால நவீன வியாதிகளின் பாதிப்புகளிலிருந்து விலக முடியும் என்ற விழிப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருவதை, நாம் எல்லோரும் அறிந்திருப்போம்.

இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது, பாரம்பரிய உணவு வகைகளை உண்ணுதல், நெல், காய்கறி மற்றும் பழ வகைகளை செயற்கை உரங்கள் இன்றி வளர வைத்தல், உடல் நலத்தை காக்க, சித்த மூலிகைகள் மூலமே தீர்வுகள் காண்பது எனப் பல்வேறு வகைகளில், இன்று இயற்கை ஆர்வலர்களால் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அப்படி இயற்கையோடு இணைந்து வாழும் கலையின் ஒரு அங்கம்தான், வாழை இலை சூரிய குளியல். அது என்ன வாழை இலை குளியல் என்கிறீர்களா?

குளியல் என்றால், அது பொதுவாக தண்ணீரில் நீராடுவது, ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ அல்லது வீடுகளில் உள்ள குழாய்கள் வழியே வரும் தண்ணீரிலோ, இதில் ஒன்றில்தான், நமது அன்றாட குளியல் இருக்கும்.

சூரியக் குளியல் என்றால், உடலில் குறைந்த பட்ச ஆடைகளுடன், சில க்ரீம்களை உடலில் தடவிக் கொண்டு, கடற்கரையோரமோ அல்லது மலைகளின் சமவெளிகளிலோ தரை விரிப்புகளை விரித்து அதில் மனிதர்கள், சூரியனைப் பார்த்து, படுத்து கிடப்பதாகும்.

பெரும்பாலும் மேலை நாட்டினர், இந்த வகை குளியலை அதிகம் மேற்கொள்வர். அவர்களின் குளிர்ச்சி மிக்க சீதோஷ்ண நிலை காரணமாக, உடலில் சூரிய கதிர்கள் படுவது அரிதாக இருக்கும்.
இப்படி பயிற்சி மேற்கொள்ள, சூரியக்கதிர்கள் அவர்களின் சருமத்தை, உடலை, வியாதிகளில் இருந்து காக்கும் என்பதற்காகவே, குளிர் பிரதேச நாட்டினர், சூரியக் குளியலை மேற்கொள்வர்.
நாம் இங்கு காண இருப்பது வாழை இலை குளியல்.

வாழை இலைக் குளியல் என்றால் என்ன?

வாழை இலை குளியல் என்பது சூரியக் குளியல் போலத்தான், இதற்கு தண்ணீர் தேவையில்லை, ஆயினும் ஒருவர் துணை வேண்டும். காலை வெயிலில், உடலில் துண்டுடன் கோரைப்பாயில் கிடந்து, தலையில் ஒரு ஈரத்துண்டை முண்டாசு போல கட்டிக் கொண்டு, உடல் முழுவதும் வாழை இலை கொண்டு நன்கு கட்டி, மூச்சு விடுவதற்கு மட்டும் இலைகளை முகத்தின் அருகே சற்று விலக்கி விட்டு, குறைந்தபட்சம் அரை மணி நேரம் அவர்கள் அந்த சூழலில் இருப்பதே, வாழை இலை குளியல்.

அவ்வப்போது இலைகளின் மேல் தண்ணீர் தெளித்து வர வேண்டும். நல்ல வியர்வை சுரக்கும், ஆயினும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், இடையிலேயே வெளியில் வந்து விடலாம்.

வாழை இலை குளியல் எதற்கு?

உடலில் உள்ள சுவாச கோளாறுகள், ஒவ்வாமை சரும பாதிப்புகள், கை கால் வீக்கம், உடலில் சேர்ந்த கெட்ட நீரால் ஏற்படும் வியாதிகள், சிறுநீரக கோளாறுகள், உடல் சுரப்பிகளின் பாதிப்புகள், தசை நரம்பு பாதிப்புகள் போன்ற பாதிப்புகள் அனைத்தையும் சரிசெய்து, உடல் எடையைக் குறைத்து, மனதுக்கு புத்துணர்வு கொடுத்து, உடலை பொலிவோடு, வலிமையாகவும் ஆக்கவல்லது, இந்த வாழை இலை குளியல்.

எதற்கு வாழை இலை ?

உலகில் உள்ள மரங்களில் நாம் வீடுகளில் அதிகம் வளர்க்கும் வாழை மரங்கள்தான், காற்றில் உள்ள கார்பனை சுவாசித்து, மனிதர்கள் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனை, அதிக அளவில் வெளியிடுகின்றன.

தீப்பட்டவுடன் முதலுதவிக்கு 

கிராமங்களில் தீக்காயம் பட்டோருக்கு முதலில் வாழை மரப்பட்டை, வாழை இலைகளில் படுக்கவைத்த பின்னரே, சிகிச்சைகள் அளிப்படுகின்றன.

தீக்காயங்கள் மேலும் புண்ணாகி விடாமல் தடுக்கவும், காற்றில் உள்ள நச்சுக்கள் மூலம் காயங்கள் செப்டிக் எனும் தோல் அழுகல் பாதிப்பு அடையாமல் தடுக்கவும், வாழை பட்டைகளும், இலைகளும் பெரிய அளவில் பயனாகின்றன.

அதுபோலத்தான், வாழை இலையை உடல் முழுவதும் போர்த்திய நிலையில் இருக்கும்போது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வாழை இலைக்குளியல், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.

வாழை இலைக் குளியல் :

உடலை முற்றிலும் மூடிய வாழை இலையில் ஒருவர் சூரியக் குளியல் செய்வதன் மூலம், வாழை இலைகளின் மூலம் கிடைக்கும் ஆக்சிஜன் காற்று அவர்களுக்கு, சுவாச பாதிப்பில்லாமல், அந்த நிலையில் இருக்க, பேருதவி புரியும்.

அதன் அற்புதங்கள் :

உடலில் உள்ள நச்சுக் காற்றை வாழை இலைகள் கிரகித்து, மனிதர்களின் உடல் நலத்தை காக்கின்றன. உடலில் உள்ள அசுத்த நீர், வியர்வை சுரப்பிகளின் மூலம் வெளியேற, வாழை இலைக் குளியல் வாய்ப்பாகிறது. உடல் நாளங்களில் ஏற்பட்ட கோளாறுகளை, சிறுநீரக பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கது இந்த வாழை இலை குளியல்.

கடைபிடிக்க வேண்டியவை-1

முதல் நாள் பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாகவே உண்ண வேண்டும், வெள்ளரி பழச் சாறு அல்லது ஆரஞ்ச் பழச் சாறு பருகி வரலாம். அசைவம், டீ காபி, குளிர்பானங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாதாரண வெப்ப நிலையில் உறங்க வேண்டும், கண்டிப்பாக ஏசியில் உறங்கக் கூடாது.

கடைபிடிக்க வேண்டியவை-2

குளியலுக்கு முன் நிறைய தண்ணீர் பருக வேண்டும், குளியல் முடிந்த பின் சிறிது இந்துப்பு கலந்த எலுமிச்சை தேன் சாற்றை, நிறைய தண்ணீர் விட்டு, நிதானமாக பருகிய பின், சற்று நேரம் கழித்து, வழக்கமான குளியலை மேற்கொள்வது நலம்.

குளித்த பின் :

குளித்த பின்னர், அன்றைய தினம் முழுவதும், பச்சையான பழ காய்கறி உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது, இல்லையெனில் சிறிது அரிசி உணவு சேர்த்துக் கொள்ளலாம். இது போல, உணவுக்கட்டுப்பாடுகள் கொண்ட நடைமுறைகளின் மூலமே, வாழை இலைக் குளியலால் ஏற்படும் நன்மைகளை, நாம் தக்க வைத்துக் கொள்ளமுடியும்.

புத்துணர்வு 

பெண்களும் இந்த குளியல் எடுத்துக்கொள்ள, அவர்களும் உடல் நல பாதிப்புகள் நீங்கி, புத்துணர்வு பெறலாம். இயற்கை வழி நிற்பதே, என்றும் நிரந்தரமானது.

இயற்கை முறைகளுக்கு மாறுவது என்பது, ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கலாம், ஆயினும், அவற்றால் ஏற்படும் நிரந்தர பலன்களை மனதில் எண்ணினால், சிரமங்கள் யாவும், சிங்கத்தை கண்ட சிறுநரிகளைப் போல, பம்மி ஓடிவிடும்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close