Breaking News
Home / செய்திகள் / உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமான் இருக்கும் இடம்!!

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமான் இருக்கும் இடம்!!

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமான் இருக்கும் இடம்!!

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமான் இருக்கும் இடம்!!

புகழ்பெற்ற இந்து யாத்ரீக தளமான இது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கிய தளமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

அலையலையான நிலப்பரப்பில் அமைந்துள்ள தியோகரில் சிறிய குன்றுகளும் ஏராளமாக உள்ளன. பிரதான கோவில் வளாகம் 22கொவில்களுடன், 12 ஜோயோதிர்லிங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

பாபா பைத்யநாத் கோவிலுக்கு ஆண்டு முழுதும் ஏராளமான பயணிகள் வருகிறார்கள். சுல்தான்கஞ்சில் இருந்து 100கிமீ நடந்தே இக்கோவிலை அடைகின்றன. இந்து யாத்ரீகர்களுக்கு முக்கியமான இந்த இடம் கடவுள்களின் பூமி என்றழைக்கப்படுகிறது.

யமுனாஜோர் மற்றும் தருவா ஆகிய நதிகள் இவ்வூரின் வழியே ஓடுகின்றன. இயற்கை அழகும், மிதமான வானிலையும் உள்ள தியோகர் புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள் 

பைத்தியநாத் கோவில், ராமகிருஷ்ண வித்யாபீடம், த்ரிகுத், சத்சங் ஆசிரமம், நவ்லகா கோவில், ஷ்ராவணி மேளா, ஷிவ்கங்கா, தேவசங்கா மடம் ஆகிய இடங்கள் இங்கு உள்ளன. மேலும் நந்தன் பஹார் என்ற புகழ்பெற்ற மலைஸ்தலமும் உண்டு.

சாலை வழி:
சுற்றுவட்டார நகரங்களுக்கும், கோல்கட்டா, ராஞ்சி, பாட்னா ஆகிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் சிறப்பான முறையில் உள்ளன.

பைத்யநாத் தாம்

இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் ஜார்கண்டின் பிரதான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்து புராணத்தின்படி ராவணனின் வேண்டுதலில் மகிழ்வுற்ற சிவன் அவருக்கு ஒரு லிங்கத்தை பரிசளித்ததாகக் கூறப்படுகிறது.

எதிரி அரசுக்கு அந்த லிங்கம் போவதை விரும்பாத மற்ற கடவுள்கள் விஷ்ணுவிடம் வேண்ட, அதன்படி விஷ்ணு ஐயர் வேடம் பூண்டு ராவணனை அந்த லிங்கத்தை தவறவிட வைத்தாரம். அந்த லிங்கமே தியோகரின் பிரதிஷ்டை செய்யப்படுவதாக நம்பப்படுகிறது.

1596ல் உருவாக்கப்பட்ட இந்தக் கோவிலின் லிங்கம் பைஜூ என்பவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு பைத்யநாத் கோவில் என வழங்கப்பட்டது.

நெளலாகா கோவிலும் அருகிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு 30நாள் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக குவிகிறார்கள்.

சிறிய கடைகளும், உணவகங்களும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகின்றன. காலை 4மணிக்கே திறக்கப்படும் கோவில் இரவு 9மணிக்கு சாத்தப்படுகிறது.

ராமகிருஷ்ண மிஷன் வித்யாபீடம் .

1922-ல் விவேகானந்தரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ண மிசனின் கிளையான வித்யா பீடம் விவேகானந்தரின் போதனைகளின்படி சிறுவர்களுக்கு கல்வி அளிக்கிறது. தங்கிப்படிக்கும் பள்ளியாக திகழும் வித்யா பீடத்தின் வளாகம் இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுகிறது. மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ராம்கிருஷ்ண மிஷனின் துறவிகளே இந்தப் பள்ளியை பராமரிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது விவேகானந்தரின் ஆன்மீக சொற்பொழிவுகளை புத்தகங்களின் மூலம் இந்த பீடம் பரப்புகிறது. மருத்துவசேவைகளும் வளாகத்தின் உள்ளேயே உள்ளன. வளாகத்தினுள் கோவில் ஒன்றும், ராமகிருஷ்ண தர்சன் என்ற காட்சியகமும் உண்டு. அருங்காட்சியகம் இருக்குமிடம் சாரதா தர்ஷன் என்றழைக்கப்படுகிறது.

நந்தன் பஹார் 

தியோஹரின் மேற்கு எல்லையிலுள்ள இந்த மலை புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். இங்கேயே ஒரு சிவன் கோவிலும், நந்தி கோவிலும் ஒரு சிறுவர் பூங்காவும் உள்ளன.

பேய்வீடு, கண்ணாடி வீடு என பலவகையான விளையாட்டுக்கள் இங்கே உள்ளன. படகு மற்றும் ரஷ்ய ஊஞ்சல் விளையாட்டுக்கள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
த்ரிகுத்
த்ரிகுடாசல் கோவிலுக்கு புகழ்பெற்ற இந்த மலை தியோகரில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ளது. 2470அடி உயரத்தில் உள்ள இந்த சிவன் கோவில் மயுராக்‌ஷி நதிவாயிலில் உள்ளது.

மூன்று பிரதான உச்சிகள் இந்த மலைக்கு உள்ளதால் த்ரிகுத் என அழைக்கப்படுகிறது, மலைகளுக்கு மத்தியில் சம்பாதானந்தா தேவ் என்பவரால் உருவாக்கப்பட்ட திருகுடாசல் ஆசிரமம் ஒன்று உள்ளது. தற்சமயம் அவரது சீடர்களால் நடத்தப்படும் அந்த ஆசிரமத்தில் த்ரிஷூலி அம்மனின் கோவில் ஒன்றும் உள்ளது. ஜார்கண்டின் முதல் கயிற்றுவழியும் இங்கே அமைந்துள்ளது.

சத்சங்க ஆசிரமம்

1946-ல் தாகூர் அன்குல்சந்திரா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ஆசிரமம் தியோகரின் முக்கியமான தளமாகும். விவசாயம், கல்வி, திருமணம், வரலாறு ஆகிய நான்கு முதன்மையான மூலங்களை இங்கிருப்பவர்கள் கடைபிடிக்கிறார்கள். ஆரிய தர்மத்தை போதிக்கும் இந்த ஆசிரமத்தில் அருங்காட்சியகம் ஒன்றும், வனவிலங்கு சரணாலயம் ஒன்றும் உள்ளது.

பல இலவச மருத்துவமனைகளையும், பள்ளிகளையும் உருவாக்கியுள்ள இந்த ஆசிரமத்திற்கு அச்சுதொழிலும், அச்சகமும் உண்டு.

நவ்லேகா கோவில்

ராதா கிரிஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோவில், பாலானந்த் பிரம்மாச்சாரியின் சீடரான ராணி சாருஷீலாவால் கட்டப்பட்டது. தியோகருக்கு வெளியே உள்ள இந்தக் கோவிலில் இருந்து 1.5கிமீ தொலைவில் பைத்யநாத் கோவில் உள்ளது. பெலூரில் உள்ள ராமகிருஷ்ணா கோவிலைப் போலவே அமைந்துள்ள இந்த கோவிலைக் கட்ட ஒன்பது லட்ச ரூபாய் செலவிடப்பட்டதால் நவலேகா கோவில் என்றழைக்கப்படுகிறது.

சிவகங்கா 

இந்தக் குளத்தின் நீர் புனிதமானதாகவும், பல நோய்களைத் தீர்ப்பதாகவும் கருதப்படுகிறது. பைத்யநாத் கோவிலில் இருந்து 200மீ தொலைவில் உள்ள இந்தக் குளத்தில் நீராட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அருகிலேயே சிறிய சிவன்கோவில் ஒன்றும் உள்ளது.

இந்து புராணத்தின்படி இந்தக் குளத்தை கையால் பூமியில் அடித்து சிவன் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு செல்லும் வழியில் சிறுநீர் கழித்துவிட்டு கைகழுவ நீர்தேடிய போது நீர் கிடைக்காததால் இங்கு குளத்தை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

தேவசங்கா மடம்

நரேந்திரநாத் பிரம்மச்சாரியா உருவாக்கிய இந்த தேவசங்கா மடம் பைத்யநாத் கோவிலில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ளது. நவதுர்கா கோவில் உள்ள இந்த மடம் 1955ல் கட்டப்பட்டது. வருடாவருடம் துர்கா பூஜா விழா கொண்டாடப்படும் இந்த மடத்திற்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

எப்படி செல்லலாம்?

ரயில் வழி:
பைதியநாத் தாம் ரயில் நிலையமும், ஜசிதிஹ் ரயில் நிலையமும் அருகாமையில் உள்ளன. ஹவுராஹ் பாட்னா டெல்லி வழித்தடத்தில் இருக்கும் ஜசிஹித் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரயில் அடிக்கொருமுறை உள்ளது.

விமான வழி:
அருகில் உள்ள பாட்னா விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு விமானசேவை உள்ளது.

பயணிக்க சிறந்த பருவம் 

ஜூலை முதல் ஆகஸ்ட் வரை அதாவது ஷ்ராவன மாதத்திலும், பின்பு அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரையிலும் பயணிப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது.சுற்றுலா ஈர்ப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close