Breaking News
Home / பொழுதுபோக்கு / நக்கலு.. நையாண்டி.. வில்லனுக்கு வேற வடிவம் கொடுத்த சத்யராஜ்

நக்கலு.. நையாண்டி.. வில்லனுக்கு வேற வடிவம் கொடுத்த சத்யராஜ்

நக்கலு.. நையாண்டி.. வில்லனுக்கு வேற வடிவம் கொடுத்த சத்யராஜ்

நக்கலு.. நையாண்டி.. வில்லனுக்கு வேற வடிவம் கொடுத்த சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் நடிக்கிறதைப் பார்க்கும்போது எவ்வளவு ஜாலியா இருக்குமோ அப்படியேதான் அவரைப் பத்தி எழுதும்போதும் இருக்கும். ஏன்னா அப்படி ஒரு கேரக்டர் அவர். ‘ஆறு ரவுண்டு குடிச்சும் போதை ஏறலைன்னா அப்புறம் இந்த கருமத்தை எதுக்கு குடிக்கணும்?’ அப்படினு சொல்றதுக்கு முன்னாடி ‘போத.. போத..’ அப்படினு சொல்வார். என்ன மாடுலேஷன் தெரியுமா அது! ஒரிஜினல் நக்கல் அதெல்லாம். சும்மா கேமரா முன்னாடி இருக்கோம்ங்கிறதை மறந்தாதான் இப்படி எல்லாம் பேசவே முடியும். அந்தவகையில அவரை அடிச்சிக்க ஆளே இல்லை.

ஆரம்பகால வில்லன் சத்யராஜ் பற்றிப் பேச நிறைய விஷயம் இருக்கு அவர் நடிப்புல. அதாவது எப்படி நடிப்புல ஒரு புதுப் பாதையை ரஜினி தன்னோட ஆரம்பகாலக்கட்ட படங்கள்ல செஞ்சாரோ அதே மாதிரிதான் சத்யராஜ். அந்த தகடு தகடு, விக்ரம் படத்துல அந்த சாமியாரை கலாய்க்கிறது… இப்படி சொல்லிட்டே போகலாம். அந்த உடல்மொழி ரொம்ப முக்கியம். நக்கலான ஸ்லாங்கோட பாடியை டைட்டா ‘டேய் நான்தாண்டா வில்லன்’னு வச்சிக்காம சாதாரணமா ஃப்ரீயா வச்சிக்கிட்டு அவர் வசனங்களை சொல்றப்போ வர்ற சுகமே அலாதி.

‘அமைதிப்படை’ படம் அவரோட நடிப்பின் உச்சங்கள்ல ஒண்ணு. அவர் எப்பவுமே பார்க்கிற எகத்தாளமான பார்வை, குழந்தை மாதிரி பேசுற இடங்கள்னு ரெண்டுக்கும் இடையில இருக்குற தூரத்தை அவ்வளவு ஈஸியா, போறபோக்குல பண்ணியிருப்பார். தேர்தல் ஓட்டு எண்ணும்போது ஒவ்வொரு ரவுண்ட் எண்ணிக்கைக்கும் அவர் கொடுக்குற ரியாக்‌ஷன்லாம் சான்ஸே இல்ல. மணிவண்ணனும், சத்யராஜும் சேர்ந்து கூட்டணி அமைச்சால்தான் இந்த மாதிரி ஒரு படம் கொடுக்க முடியும்.

பாரதிராஜாவை சில விஷயங்கள்ல அடிச்சிக்கவே முடியாது. அதுல முக்கியமானது அவரோட பாத்திரப் படைப்புகள். முட்டம் சின்னப்ப தாஸ் அப்படி ஒரு கேரக்டர். அந்த கேரக்டருக்கு எனக்கு தெரிஞ்சி சத்யராஜை விட்டா வேற ஆளே இல்ல. அதேமாதிரி ஹீரோவா அறிமுகமாக சத்யராஜுக்கு அமைஞ்ச அட்டகாசமான ஒரு படம் ‘கடலோர கவிதைகள்’. இவனை இப்படியும் பார்க்கலாம்டா அப்படின்னு பாரதிராஜா நினைச்சதுக்கு 100% வழிமொழிந்திருப்பார் சத்யராஜ்.

வால்டர் வெற்றிவேலுக்கு முன்னாடியே ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்துல போலீசா நடிச்சிருந்தாலும் கூட சத்யராஜ் கேரியர்ல மறக்க முடியாத படம்னா அது ‘வால்டர் வெற்றிவேல்’தான். அவரோட கோபமான அந்த வசன உச்சரிப்பும், அவரோட உயரமும் அந்தக் கதாபாத்திரத்துக்கு அட்டகாசமா துணை போயிருக்கும். அதேமாதிரி அவர் தயாரிச்சு இயக்கிய ‘வில்லாதி வில்லன்’ படமும் பலருக்கு ரொம்ப பிடிக்கும்.அதுலேயும் அந்த பூவு கேரக்டர் எல்லாம் சத்யராஜின் ஸ்பெஷல். இப்ப பார்த்தாலும்கூட அலுக்காத படம் அது.

அதேமாதிரி அவர் பீக்-ல இருந்தப்பவும் கூட நெகட்டிவ் கேரக்டர் பண்ணத் தயங்குனதே இல்ல. ஆனா ‘சிவாஜி’ படத்துல ரஜினிக்கு வில்லனா முதல்ல நடிக்க ஷங்கர் அணுகுனது சத்யராஜைத்தான். அந்த கேரக்டர் வடிவமே அப்படித்தான் இருக்கும். அப்புறம்தான் கிட்டத்தட்ட சத்யராஜ் மாதிரியே இருக்குற சுமனை நடிக்க வச்சாங்க. ஆனா சத்யராஜ் நடிச்சிருந்தா அந்த நக்கலான வில்லன் கேரக்டர் எங்கயோ போயிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close