Breaking News
Home / தொழில்நுட்பம் / ஒலி அலை மூலம் கொசுக்களை விரட்டும் எல்ஜி கே7ஐ; நம்பி வாங்கலாமா.?

ஒலி அலை மூலம் கொசுக்களை விரட்டும் எல்ஜி கே7ஐ; நம்பி வாங்கலாமா.?

ஒலி அலை மூலம் கொசுக்களை விரட்டும் எல்ஜி கே7ஐ; நம்பி வாங்கலாமா.?

ஒலி அலை மூலம் கொசுக்களை விரட்டும் எல்ஜி கே7ஐ; நம்பி வாங்கலாமா.?

நம்பினால் நம்புங்கள் இல்லையெனில் கூகுள் செய்துகூட பாருங்கள். அதிக அளவினான மனித மரணத்தை ஏற்படுத்திய ஒரு விலங்கு அல்லது ஒரு உயிரினம் எதுவென்று கூகுள் தேடல் நிகழ்த்தி பாருங்கள் உங்களுக்கு கிடைக்கும் விடை – கொசுக்கள் என்பதாய் இருக்கும்.

மனிதர்களுக்கு மிகவும் கொடிய நோய்களை பரப்புவதில் கொசுக்கள் பெரும் பங்கை வகிக்கின்றன என்கிறது உலக சுகாதார மையம். மேலும் அறிக்கைகளின்படி, கொசுக்களினால் ஒவ்வொரு வருடமும் 7,25,000 மனித மரணங்கள் ஏற்படுகின்றன. அதாவது இந்த எண்ணிக்கையானது, மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் இறப்புக்களைவிட இரட்டைத் தொகையாகும், மேலும் ஒரு ஆண்டு பாம்புகள் ஏற்படுத்தும் இறப்புகளைவிட கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகமாகும். இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் மட்டுமே, டெங்கு வைரஸ் நோய்க்கான 68,000 நேர்மறை இரத்த மாதிரிகள் வைத்தியசாலைகளில் பதிவாகியுள்ளது.

தனித்துவமான தயாரிப்பு

இதையெல்லாம் மனதிற்கொண்டு எல்ஜி நிறுவனம் சாதனையை அடைய முடிவெடுத்து, உலகின் முதல் கொசுக்களை விரட்டும் மொபைல் நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் வெறும் ரூ.7,990/- என்ற சூப்பர் பட்ஜெட் விலைக்கு எல்ஜி கே7ஐ அறிமுகமாகியுள்ளது. கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பாய் வைத்திருக்கும் அதே சமயம் இயக்கருவி ஒரு மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது உண்மையிலேயே தனித்துவமான தயாரிப்பு மற்றும் இன்னொரு தொழில்நுட்ப மைல்கல் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

சுகாதார நுண்ணறிவு

எல்ஜி ஒரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்ல, ஏற்கனவே அதன் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் டெலிவிஷ்களில் கடந்தகாலம் தொட்டு தற்போது வரை பல தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய வண்ணனும் உள்ளது. முக்கிய சுகாதார நுண்ணறிவுகளின் அடிப்படையில், இப்போது கொசுக்களை விரட்டும் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட கே7ஐ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

கதிர்வீச்சுகளையும் வெளியிடவில்லை

எல்ஜி கே7ஐ சாதனத்தை சர்வதேச பயோடெக்னாலஜி மற்றும் நச்சுயியல் நிறுவனம் (IIBAT) சான்றளித்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு கதிர்வீச்சுகளையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் அடிப்படையில் ஒரு அதிவேக சோனிக் சாதனமாகும். இது ஒரு முறை செயல்படுத்தப்பட்டால், கொசுக்களின் தொல்லையும் மற்றும் அதன் மூலமாக பரவும் கொடிய உயிர்கொல்லி நோய்களும் உங்களை அண்டாது.

ஒலி அலை

இந்த ஸ்மார்ட்போனின் மாஸ்கிட்டோ அவே தொழில்நுட்பத்தின் அல்ட்ராசவுண்ட் அலைகள் முன்னர் பூச்சிகளால் தாக்குப்பிடிக்க முடியாது. கே7ஐ ஸ்மார்ட்போன் ஒலி அலைகளை மட்டுமே பயன்படுத்தும் என்பதால் நுகர்வோர்களுக்கு எந்த தீங்கும் இருக்காது என்பது உறுதி. மேலும், எல்ஜி கே7ஐ சாதனத்தின் இந்த தொழில்நுட்பம் உலகளாவிய அமைப்புகளால் அமைக்கப்பட்ட நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ட்ராசோனிக் அதிர்வெண் போன்ற மிகவும் பாதுகாப்பான மற்றும் பாதிப்பில்லாத ஒன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மாஸ்கிட்டோ ஸ்டான்ட்

சாதன உரிமையாளர்கள் கருவியை எதுவாக பயன்படுத்துவதற்கு உதவியாக, எல்ஜி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கான ஒரு சரியான பேக் கவரை வடிவமைத்ததோடு இல்லாமல், மாஸ்கிட்டோ ஸ்டான்ட் ஒன்றையும் வழங்குகிறது.

டிஸ்பிளே

இந்தியாவில் பிரத்தியேகமாக கிடைக்கும், இந்த எல்ஜி கே7ஐ பூச்சிகளை கொல்வதில் மட்டுமின்றி நியாமான அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது மற்றும் சிறப்பான செயல்திறனுக்கான உகந்த வன்பொருள் பொதிகளையும் ஒன்றுள்ளது. இக்கருவியின் 5 இன்ச் ஆன்-செல் எச்டி (720 x 1280) டிஸ்பிளே ஆனது உங்களின் வீடியோ ப்ரவுஸிங் மற்றும் கேமிங் அனுபவத்தை அதிவேகமாக்குகிறது. அளவீட்டில் 138 கிராம் எடையுள்ள இலகுரக சாதனமாக இருப்பதால், இது முழுமையான முறையில் சுலபமாக கையாளப்படுகிறது.

கேமரா 

இதன் 8எம்பி பின்புற கேமரா துல்லியமான மற்றும் அசலான வண்ணங்களில் தருணங்களைக் கைப்பற்றும்.ஸ்க்ரீன் டாப் செய்வதின் மூலமாகவும் உடனடி மற்றும் தரமான படங்களை கிளிக் செய்யலாம். மேலும் 10 தொடர்ச்சியான பர்ஸ்ட் ஷார்ட் புகைப்படங்களுக்கு ஷட்டர் பொத்தானை தொடர்ந்து அழுத்துவதன் ,மூலம் பதிவாக்கலாம். இதன் 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவை பொறுத்தமட்டில், கெஸடர் இண்டர்வெல் ஷார்ட் உடன் ஒருங்கிணைபெற்றுள்ளதால் பொதுவாக செல்பீக்களில் ஏற்படும் தெளிவின்மை போன்ற சிக்கல்களை சமாளிக்கலாம்.

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு

ஒரு க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படும் எல்ஜி கே7ஐ ஆனது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேர பேட்டரியை வழங்கும் அகற்றக்கூடிய ஒரு 2500எம்ஏஎச் மூலம் ச்கதியூட்டப்படுகின்றது. ரூ.7,990/- என்ற விலைமதிப்பை பெற்றுள்ள இக்கருவி இந்தியாவில் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close