Breaking News
Home / பொழுதுபோக்கு / வாவ்வ்… ‘மாரி -2’ படத்து ஹீரோயின் இந்த டீச்சர்தான்!

வாவ்வ்… ‘மாரி -2’ படத்து ஹீரோயின் இந்த டீச்சர்தான்!

வாவ்வ்… ‘மாரி -2’ படத்து ஹீரோயின் இந்த டீச்சர்தான்!

வாவ்வ்… ‘மாரி -2’ படத்து ஹீரோயின் இந்த டீச்சர்தான்!

சென்னை : தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மாரி’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வடசென்னை’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து ‘மாரி -2’ படப் பணிகளில் இறங்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தனுஷே தயாரிக்க இருக்கிறார்.

பாலாஜி மோகன் இயக்கம் :

அக்டோபரில் தொடங்கும் ‘மாரி -2’ படத்தை பாலாஜி மோகன் இயக்க, ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ், முதற்பாகத்தின் கதாபாத்திரம் போலவே ரோபோ ஷங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மலையாளத்திலிருந்து வில்லன் :

இப்படத்தின் வில்லனாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, தனுஷ் தயாரித்திருக்கும் மலையாள படமான ‘தாரங்கம்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார் டோவினோ தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் :

இசையமைப்பாளர் மற்றும் இதர கதாபாத்திரங்களை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியிலும் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close