Breaking News
Home / செய்திகள் / உலக பிரபலங்கள் இறப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கடைசி படங்கள்!

உலக பிரபலங்கள் இறப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கடைசி படங்கள்!

உலக பிரபலங்கள் இறப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கடைசி படங்கள்!

உலக பிரபலங்கள் இறப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கடைசி படங்கள்!

மரணம் என்பது நம்மை தேடி வர வேண்டும். நம்மை விரட்டிப்பிடிக்க வேண்டும். நம்மை பிடிப்பதற்குள் அது ஓய்ந்து போய்விட வேண்டும். அது தான் நீங்கள் ஓர் நல்ல வாழ்க்கை வாழ்ந்ததற்கான அடையாளம்.

சிலரை மரணம் விரும்பாத போதிலும், சில கயவர்கள், சூழல்கள் மரணத்திடம் ஒப்படைத்துவிடுவர்கள். மரணம் நம்மை வந்தடைய, மரணத்தை நாம் சென்றடைய நிறைய வழிகள் இருக்கின்றன.

அதே போல மரணத்திற்கு வலியும் இருக்கிறது. நமது மரணத்தின் வலியை நாம் எப்போதும் உணர முடியாது. ஆனால், நமக்கு பிடித்த நபரின் பிரிவு அந்த வலியை நம்மை உணர செய்யும்.

நாளையே மரணம் ஏற்படலாம் என்ற அச்சம் எந்த மனிதனிடம் இருக்கிறதோ, அவனே தனது சிறந்த செயற்பாட்டை இன்று வெளிப்படுத்துகிறான்.

நாம் அடுத்த நொடியில், நிமிடத்தில் இறந்துவிடுவோம் என அறியாமல் பிரபலங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு…

ஹிட்லர்!

நாசி அமைப்பின் தலைவரான அடால்ப் ஹிட்லர் இறக்கும் முன் எடுக்கப்பட்ட கடைசி படமாக இந்த புகைப்படம் கருதப்படுகிறது. இவர் தனது பெர்லின் தளத்தில் இருந்து வெடிகுண்டால் ஏற்பட்ட தாக்கத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் படம் இது.

இன்னும் இவரது மரணம் ஒரு மர்மமாகவே இருக்கிறது, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டா, சையனைடு உட்கொண்டா? அல்லது விஷம் பருகினாரா என பல கோணங்களில் மர்மம் தொடர்கிறது.

ஆனால், இவர் இறந்ததாக அறியப்படும் காலத்திற்கு பிறகும் சில வருடங்கள் வாழ்ந்து வந்தார். தனது சுரங்கம் வழியே தப்பித்து அவர் வேறு சுரங்கத்தில் கொஞ்சம் காலம் வாழ்ந்து வந்ததாக சில கூற்றுகள் கூறுகின்றன.

பால் வாக்கர்!

தி ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் படத்தின் முக்கிய கதாபாத்திரம் பால் வாக்கர். தனது தொண்டு நிறுவனமான ரீச் அவுட் வேர்ல்ட் நடத்திய நிகழவில் கலந்து கொண்டு காரில் திரும்பும் போது, கட்டுப்பாடு இழந்து மரத்தில் மோதி தீவிபத்து ஏற்படவே, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் பால் வாக்கர்.

அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு இவர் திரும்பும் போது எடுத்த புகைப்படம் இது.

மைக்கல் ஜாக்சன்!

பாப் உலகின் சக்கிரவர்த்தி, கிங் ஆப் பாப் என புகழப்படும் மைக்கல் ஜாக்சன், நீண்ட இடைவேளைக்கு பிறகு திஸ் இஸ் இட் என்ற இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்த இந்த நிகழ்சிக்கு முன் ரிகர்சல் செய்த போது எடுத்தப்படும்.

பிறகு இவர் அதிக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்ட காரணத்தால் மரணமடைந்தார்.

ராபர்ட் கென்னடி!

அமெரிக்காவின் 64வது அட்டர்னி ஜெனரல் ராபர்ட் கென்னடி. இவர் தனது சகோதரர் ஜான் கென்னடி பதிவி காலத்தில் இருந்த போதும் பணியாற்றியவர். கலிபோர்னியா ப்ரைமரியில் வெற்றிபெற்று தனது ஆதரவாளர்களுக்கு முன் உரையாற்றிய பிறகு இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ராபர்ட் கென்னடியின் உயிர் பிரியும் முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம்.

டேல் எர்ன்ஹார்ட்!

டேல் எர்ன்ஹார்ட் ஒரு கார் பந்தய விளையாட்டு வீரர் ஆவார். இவர் தனக்கென தனி அணியும் சொந்தமாக வைத்திருந்தார். டேடோனா சர்வதேச பந்தைய சாலையில் நடந்த ரேஸ் ஒன்றில் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இவர் உயிரிழந்தார். போட்டியில் கலந்துக் கொள்ளும் முன்னர் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

டுபக் ஷகூர்!

டுபக் ஷகூர், இவர் ஒரு அமெரிக்க ராப் பாடகர்.ஒரு குத்து சண்டை போட்டியை கண்டு நண்பருடன் வீடு திரும்பும் போது, இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த நபர்கள் நான்கு முறை துப்பாக்கியால் சுட்ட கொன்றனர். அதில் இரண்டு புல்லட்டுகள் மார்பிலும், ஒன்று தோள்ப்பட்டையிலும், ஒன்று தொடையிலும் பாய்ந்தன.

அன்று இரவு அந்த நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது எடுக்கப்பட்ட கடைசி படம்.

காதலர்கள்!

தனது காதலனுடன் ஸ்னாப்சாட்டில் இந்த பெண் பகிர்ந்த கடைசி பதிவு. இதற்கு பிறகு இருவரும் சுட்டக் கொண்டு இறந்துப்போனார்கள்.

அம்மா – மகன்!

விமான பயணத்தின் போது அம்மா – மகன் கடைசியாக எடுத்துக் கொண்ட செல்ஃபீ புகைப்படம். இதன் பிறகு அந்த மலேசியன் 370 விமானம் மாயமானது.

அம்மா – மகள்!

எம்.எச். 17 லில் பயணிக்கும் முன்னர் விமானத்தின் உள்ளே டேவ் ஹாலி தனது மனைவி மற்றும் மகளை எடுத்து படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close