Breaking News
Home / செய்திகள் / 60 மணி நேரப் போராட்டம்! உயிரைத் தந்து பாடம் கற்பித்த சிறுமி

60 மணி நேரப் போராட்டம்! உயிரைத் தந்து பாடம் கற்பித்த சிறுமி

60 மணி நேரப் போராட்டம்! உயிரைத் தந்து பாடம் கற்பித்த சிறுமி

60 மணி நேரப் போராட்டம்! உயிரைத் தந்து பாடம் கற்பித்த சிறுமி

1985 ஆம் ஆண்டு, கொலும்பியாவில் இருக்கும் அர்மிரோ என்ற இடத்தல் நடைப்பெற்ற எரிமலை வெடிப்பு சம்பவம் உலகையே உலுக்கியது. இன்று அந்த நகரம் பேய்களின் நகரம் என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு அதன் தீவிரம் இருந்திருக்கிறது. அப்போது அரசாங்கம், கொரில்லா படையினருடன் போரிடுவதில் முனைப்பாக இருந்தாலும் பல அறிவியலாலர்கள் இச்சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுத்துக் கொண்டேயிருந்தார்கள்.

ஆனால் அன்றைக்கு முழு நகரமே அழிந்து போனது. அவர்களில் 13 வயது சிறுமி ஒமயரா என்ற பெண் குழந்தை இறந்த சம்பவம் தான் உலகத்தின் கவனத்தையே ஈர்த்தது.

எரிமலை வெடிப்பு ஆரம்பம் :  

1985 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி அர்மிரோ இடத்தில் இருக்கு நிவடோ டெல் ரியூஸ் என்ற எரிமலை கக்கத்துவங்கியது. புகைத்துக் கொண்டே குப்பைகளை கக்கியது.ஒரு நொடியில் 6 மீட்டர் தூரம் அதன் குப்பைகள் வெளியே வந்தன. கிட்டத்தட்ட மொத்த நகரமே அழிந்து போனது. சுமார் 20000 மக்கள் வரை பலியானார்கள்.

இச்சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அதாவது செப்டம்பர் மாதத்திலேயே இப்பகுதியில் எரிமலை வெடிக்கும் தருவாயில் இருக்கிறது.பூகம்பம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால் இவை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை, அதோடு போதுமான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

இருபதாம் நூற்றாண்டு :

இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது, எரிமலை வெடித்து அதன் குழம்பு வரும் வழியில் தான் மக்கள் வாழும் பகுதி அதிகமாக இருந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் நடைப்பெற்ற மிகப்பெரிய எரிமலை வெடிப்பு சம்பவம் இது என்று வர்ணிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த போது ஒமயரா தன்னுடைய அம்மா, அம்மா, அண்ணன் மற்றும் அத்தையுடன் வீட்டில் இருந்திருக்கிறார். எரிமலை வெடித்து உருகி வருகிறது என்பது தெரிந்து மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது வீட்டில் உள்ள எல்லாரும் பயத்துடன் புலம்பிக் கொண்டிருந்தனர்.

ஒமயரா :

சில மணி நேரங்களில் இவர்களது வீடும் எரிமலைக்குழமில் மூழ்கத்துவங்கியது, வீடு இடிந்து விழுந்து ஒமயரா கான்க்ரீட் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டார். ஆனால் கைகள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

அதனைக் கண்டு கொண்ட மீட்பு பணியாளர்கள் ஒமயராவை மீட்க போராடினர். அவர் மேல் சேர்ந்திருந்த குப்பைகளை எல்லாம் அகற்றினர்.
கைகளைபிடித்து இழுத்தால் அவரால் மேலே வரமுடியவில்லை அவரது கால்கள் எதிலேயோ சிக்கிவிட்டிருக்கிறது.

வலுக்கட்டாயமாக எடுத்தால் கால்கள் கண்டிப்பாக உடைந்து விடும் அபாயம் இருக்கிறது.

மீட்பு பணி :

எப்படி மீட்பதென்று தெரியாமல் இப்போதைக்கு அவர் இன்னும் மூழ்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரது உடலைச் சுற்றி டயரை போட்டனர். இனி ஒமயரா மூழ்க மாட்டாள். இனி இவளைக் காப்பாற்றியாக வேண்டும்.

இவள் சிக்கிக் கொண்ட பகுதிக்கு அருகில் குழி தோண்டி கால் எப்படி சிக்கியிருக்கிறது என பார்க்கப்பட்டது.
வீடு இடிந்து விழுந்ததில் கல் சுவற்றுக்கும் கதவுக்கும் இடையில் கால்கள் சிக்கி பிணைந்திருக்கிறது.அதோடு அத்தையின் கைகளும் ஒமயராவின் கால்களை இறுக்கப்பற்றியிருக்கிறது.

வீடு இடிந்து விழும் போது ஒமயராவை காப்பாற்ற நினைத்தவர் நிலை தடுமாறி விழுந்திருக்கிறார்.

கழுத்தளவு தண்ணீரில் :

பல வழிகளில் ஒமயராவை மீட்க போராடினார்கள். அவளும் நன்றாக ஒத்துழைத்தால் ஆனால் கொஞ்சம் பயந்திருந்தாள். கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டிருக்கும் போதே பாட்டுப்பாடினாள், ஒரு பத்திரிக்கைக்கு நேர்காணல் கொடுத்தாள், இனிப்பான உணவு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டாள், சோடா குடித்தாள்.

பல கட்டங்களாக தன்னை மீட்க மீட்பு படையினர் போராடுகிறார்கள் என்பதை உணர்ந்து என்னை இங்கேயே விட்டு விடுங்கள். நீங்கள் நாள் முழுவதும் என்னை மீட்க போராடுகிறீர்கள்.

என்னால் வர முடியவில்லை நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்கச் செல்லுங்கள் என்று அவர்களிடமே சொல்லியிருக்கிறாள்!

60 மணி நேரப் போராட்டம் :

சுமார் 60 மணி நேரப் போராட்டம்! மூன்று இரவுகள் அப்படியே கடந்திருக்கிறார் ஒமயரா. முகமெல்லாம் வீங்கி விட்டிருக்கிறது கண்கள் சுருங்கி சிவப்பு கம்பிளிப்பூச்சிப் போல ஆகிவிட்டிருக்கிறது கைகள் இரண்டும் உறைந்து வெளிறிப்போய்விட்டது.

கடைசி முயற்சியாக அவளை மீட்க ஒரு பம்ப் கொண்டு வரப்பட்டது.அப்போது தான் தெரிந்தது ஒமயாரா முட்டி போட்ட நிலையில் உட்கார்ந்திருக்கிறாள்.

அவளின் காலை வெட்டிஎடுத்தால் மட்டுமே ஒமயராவை மீட்க முடியும் அதைத் தவிர வேறு வழியில்லை என்பது புரிந்தது.

காலை வெட்டுவதற்கு எந்த மருத்துவ உபகரணங்களும் இல்லை, அப்படியே வெட்டி எடுத்தாலும் அதற்கு பிறகு ஏற்படும் ரத்த இழப்புக்கு ஈடு செய்ய முடியாது, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.

அதிர்வலைகள் :

ஊரே சுடுகாடாய் மிதந்து கொண்டிருக்கும் போது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்பது சாத்தியமே இல்லை என்பது எல்லாருக்கும் புரிந்தது. அதனால் வேறு வழியின்றி அப்படியே இறக்கட்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஒம்பயராவின் உயிர் பிரியும் கணத்திற்காக காத்திருந்தார்கள்.

நவம்பர் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒமயராவின் உள்ளுறுப்புகள் செயலிழந்து, அழுகியதாலும், ரத்த ஓட்டம் இல்லாததாலும் ஒமயராவின் உயிர் பிரிந்தது.

இவரது மறைவு, மூன்று நாட்கள் இவரது போராட்டம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசாங்கம் போர்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியது.

இவரத மரணத்தை தொடர்ந்து கொலும்பியா அரசாங்கம் இயற்கை பேரழிவினால் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்கவும், தடுக்கவும் தனி இலாகா அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close