Breaking News
Home / தொழில்நுட்பம் / செப்டம்பர் 25 : அட்டகாசமான ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் அறிமுகம்

செப்டம்பர் 25 : அட்டகாசமான ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் அறிமுகம்

செப்டம்பர் 25 : அட்டகாசமான ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் அறிமுகம்

செப்டம்பர் 25 : அட்டகாசமான ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஜியோனி நிறுவனம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் நான்கு கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் புகைபடங்கள் மற்றும் தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் இரட்டை சிம் ஆதரவு மற்றும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

மீடியாடெக்:

ஜியோனி எம்7 பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6758 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் கேமரா:

இந்த ஜியோனி எம்7 டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் 4கே வீடியோ பதிவு தீர்மானம் கொண்டவையாக உள்ளது. அதன்பின் 8மெகாபிக்சல் டூயல் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close