Breaking News
Home / செய்திகள் / இந்த இடம் மட்டும் இல்லை என்றால் உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலே இல்லை!

இந்த இடம் மட்டும் இல்லை என்றால் உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலே இல்லை!

இந்த இடம் மட்டும் இல்லை என்றால் உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலே இல்லை!

இந்த இடம் மட்டும் இல்லை என்றால் உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலே இல்லை!

ஐரோப்பிய கண்டத்தில் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்துவந்த காலத்தில், அமெரிக்கா என்ற கண்டமே கண்டுபிடிக்கப்படாத பல நூற்றாண்டுகளுக்கு முந்திய காலத்தில் தமிழர்கள் மட்டும் இன்றும் எப்படி செய்தார்கள் என்று புதிர்போடும் கட்டிடங்களை பாறைகளை கொண்டு எழுப்பியிருக்கின்றனர்.

உலகமே தமிழர் புகழை பேசிக்கொண்டிருக்கும்போதும், இந்திய அரசு கீழடி போன்ற தமிழர் வரலாறை உலகுக்கு வெளிக்கொண்டு வர மௌனித்துள்ளதை கண்டு தமிழர்கள் பெரும்பாலும் கவலை கொள்கின்றனர். எனினும் தமிழர் பெருமை அடக்கமுடியாத ஆற்றலைப் போல பிளந்து கொண்டு வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.அதில் ஒன்றுதான் தஞ்சை பெரிய கோயிலின் அட்டகாசமான அற்புத கட்டிடக்கலை.

உலகின் பல அறிவியலாளர்களே வாயைப் பிளந்து இந்த அதிசயத்தைப் பார்த்து செல்கின்றனர். ஆனால் இது மட்டும் நடக்காமலிருந்திருந்தால் இப்படி ஒரு அதிசயம் உலகில் இல்லாமலே போயிருக்கும். வாருங்கள் அந்த அதிசயம் எது என்று பார்க்கலாம்.

தெரியுமா உங்களுக்கு?

எல்லா நாளும் மழைக்காலம் இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம் அப்படி தமிழர் கட்டிடக்கலை வெளிப்பாட்டின் உச்சம் என்று சொல்லப்படும் தஞ்சை பெரிய கோயிலை கட்ட பயன்படுத்திய பாறைகளை எங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு?.

அதிசய மலை

அந்த பாறைகள் வெட்டியெடுக்கப்பட்ட மலை மட்டும் இல்லாதிருந்திருந்தால், இன்று இந்த கட்டிடக்கலை அதிசயமே இல்லாமல் இருந்திருக்கும். ஏன் வேறு மலைகளிலிருந்து வெட்டி எடுத்திருக்கலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதுதான் இந்த நார்த்தாமலை பாறைகளின் அதிசயம்.

நார்த்தாமலை

தஞ்சை பெரிய கோயிலில் இருந்து 69கி.மீ தொலைவில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும்நார்த்தாமலையில் இருந்து தான் தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கான கற்கள் வெட்டிஎடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

எகிப்தில் பிரமிடு கட்டிய முறை

எகிப்தில் பிரமிடு கட்டுவதற்கு தேவையான பல நூறு டன் எடையுள்ள கற்களை நைல் நதியில் கொண்டுவந்தார்களாம். அது இங்கே சாத்தியமில்லை என்னும்போது எப்படி மிகப்பெரிய பாறைகளை இவ்வளவு தூரம் கொண்டு சென்றிருப்பார்கள் என்பதே இன்னமும் யாராலும் கண்டுபிடிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

தமிழகத்தின் மிகப்பழமையான குடைவரைக்கோயில்

பெரிய கோயிலுக்கான கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட மலை என்பதை தாண்டி தமிழகத்தில் இருக்கும் மிகவும் பழமையான குடைவரைக்கோயில்கள் நார்த்தமலையில் இருக்கின்றன.

குடைவரைக்கோயில்

நார்த்தமலையில் உள்ளவிஜயாலய சோழீஸ்வரம் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடைவரைக்கோயில் ஆகும். திராவிட கட்டிடக்கலை முறைப்படி இல்லாமல் நாகரா கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டிருக்கிறது.

பல்லவர்களின் கீழ் நார்த்தமலை

பல்லவர்களின் குடையின் கீழ் நார்த்தமலையை ஆட்சி செய்துவந்த முத்தரையர் மன்னரான சாத்தன் என்பவரால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஜயாலய சோழனால் தான் இக்கோயில் கட்டப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.

சிவபெருமான்

விஜயாலய சோழீஸ்வரம் கோயிலின் மூலவராக சிவபெருமான் லிங்க ரூபமாக மேற்குநோக்கி காட்சி தருகிறார். மூலவரின் சிலைக்கு மேலே நான்கு அடுக்கு கொண்ட விமான கோபுரம் உள்ளது. இதன் மேல் கலசம் எதுவும் இல்லை. இக்கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன.

சன்னதிகள்

விஜயாலய சோழீஸ்வரர் கோயிலை சுற்றி உமா, தக்ஷிணாமூர்த்தி, சப்தகன்னிமார் என எட்டு கடவுளர்களுக்கு சிறிய சந்நிதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதில் ஆறு சன்னதிகள் மட்டுமே இன்று உள்ளன.

300 ஆண்டுகள் கழித்து

இந்த கோயிலை கட்டியதற்கு பிறகான 300 ஆண்டுகளில் தான் தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் என சோழர்கள் சிற்பக்கலையில் உச்சம் தொட்டிருக்கின்றனர். சோழர் வரலாற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வமுடையவர்கள் நிச்சயம் செல்ல வேண்டிய கோயில் இது.

எப்படி கொண்டுவரப்பட்டது

இந்த கற்களை புதுக்கோட்டையிலிருந்து 70 கிமீ தள்ளி கொண்டு வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கப்பட்டன? ஏற்கனவே எத்தனை டன் கற்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பற்றி நாம் படித்திருக்கிறோம்.

அறிவியல்

அவ்வளவு கற்களையும் கொண்டு வருவதே அசாத்தியம் எனும்போது எப்படி இந்த கோயில் கட்டிமுடிக்கப்பட்டு இத்தனை வருடங்கள் தாக்குபிடிக்கிறது பாருங்கள். அதுதான் தமிழனின் அறிவியல் மற்றும் கணக்கு அறிவு என்பது.

எண்ணம்

என்னதான் தமிழர் தமிழர் என்றாலும், இது இந்தியாவின் சொத்தாக பேணி பாதுகாக்கப்படவேண்டும். உண்மையில் இது மட்டுமின்றி மற்ற பொக்கிஷங்களையும் இந்திய அரசு கண்டறிந்து உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்பதுதான் பழமையை போற்றும் பெருமைமிக்க ஒவ்வொருவரின் எண்ணமாக இருக்கும்.

நந்தி

கோயிலின் முன்னுள்ள நந்திசிலை

நார்த்தாமலை கோயில்

வெய்யிலில் ஜொலிக்கும் நார்த்தாமலை கோயில்

சிவன்

நார்த்தாமலை சிவன் கோயில்

நடனமாடும் சிலை

நார்த்தாமலையில் கோயிலின் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ள நடனமாடும் சிலை

கல்வெட்டு

நார்த்தாமலையிலுள்ள அரிய பெரும் கல்வெட்டுக்கள்

கோயில் கோபுரம்

நார்த்தாமலையிலுள்ள கோயில் கோபுரம்

குகைக் கோயில்

நார்த்தாமலை குகைக் கோயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close