Breaking News
Home / தொழில்நுட்பம் / பெண் வாடிக்கையாளர்களை மட்டும் அதிகம் கவரும் பிளிப்கார்ட்.. எப்படி?

பெண் வாடிக்கையாளர்களை மட்டும் அதிகம் கவரும் பிளிப்கார்ட்.. எப்படி?

பெண் வாடிக்கையாளர்களை மட்டும் அதிகம் கவரும் பிளிப்கார்ட்.. எப்படி?

பெண் வாடிக்கையாளர்களை மட்டும் அதிகம் கவரும் பிளிப்கார்ட்.. எப்படி?

இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவதற்குச் சரியான நேரம் என்றால் அது விழக்காலச் சலுகைகள் வழங்கும் நேரமாகும்.

எனவே இதுபோன்ற நேரங்களில் பெண் வாடிக்கையாளர்களை அதிகம் கவர வேண்டும் என்று இந்தியாவின் மிகப் பெரிய இணையதள ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.

பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

பிளிப்கார்ட் இணையதளத்தில் தற்போது பொருட்கள் வாங்குபவர்களில் 65 சதவீதம் நபர்கள் ஆண்களாக உள்ளனர். மீதம் இருப்பவர்கள் தான் பெண்கள்.

பிளிப்கார்ட் பெண்களை எப்படி இலக்காக அமைக்கின்றது?

அதிகப் பெண் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகப் பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்களை விட எந்தப் பிறாண்டுகளை எல்லாம் பெண்கள் அதிகம் விரும்புகின்றார்கள் என்பதை ஆராய்ந்து அந்தப் பிறாண்டுகளைத் தங்களத்தில் பட்டியலிட வைத்துள்ளது.

எந்தப் பிரிவுகளில்

அதில் முக்கியமாகப் பெண்கள் அதிகம் விரும்பி வாங்கும் பேஷன் பிராண்டுகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் புத்தகம் போன்றவற்றில் பிளிப்கார்ட் நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றது.

அதிகச் செலவு செய்யும் பெண்கள்

ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் அதிகளவில் செலவு செய்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தங்களது 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் எண்ணிக்கையில் பெண்களை அதிகம் வாங்க வைக்க வேண்டும் நோக்கத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close