Breaking News
Home / செய்திகள் / திருப்பதியின் யாருமறியாத தங்கக் கிணறு மர்மங்கள் தெரியுமா?

திருப்பதியின் யாருமறியாத தங்கக் கிணறு மர்மங்கள் தெரியுமா?

திருப்பதியின் யாருமறியாத தங்கக் கிணறு மர்மங்கள் தெரியுமா?

திருப்பதியின் யாருமறியாத தங்கக் கிணறு மர்மங்கள் தெரியுமா?

திருப்பதி ஏழுமலையானின் அற்புதங்களையும், ஆச்சர்யங்களையும் நாம் ஏற்கனவே பல கட்டுரைகளில் பார்த்திருப்போம்.

அதுமட்டுமின்றி ஏழுமலையானின் எண்ணிலடங்கா மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம் போலிருக்கிறது. ஆம். திருப்பதி கோயில் இருக்கும் திருமலையின் அருகே இரண்டு தங்கக் கிணறுகள் இருப்பது நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி திருமலை தங்கக் கிணறு பற்றிய மர்மங்களை இந்த பதிவில் காணலாம்.

33 வருடங்களுக்கு முன்பு

திருமலை தங்க கிணறு குறித்து பார்ப்பதற்குமுன், ஒரு சில தகவல்களைப் பார்ப்போம்.

அதாவது கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன் இந்த தங்க கிணறு அரசால் மூடப்பட்டது. இந்த கிணற்றில் இருக்கும் நீர் உபயோகப்படுத்த உகாதது எனக்கூறி முற்றிலுமாக கைவிடப்பட்டது இந்த கிணறு.

2007ல் நடந்த அதிசயம்

23 வருடங்கள் மூடப்பட்டிருந்த கிணறு பாழடைந்து கிட்டத்தட்ட எதற்குமே லாயக்கற்றதாகிப் போனது. பின்னர் 2007ம் ஆண்டு திருமலையான் மகிமை காரணமாக அந்த கிணற்றிலுள்ள நீர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாறிவிட்டதாம்.

ஏழு சிகரங்கள்

கடல் மட்டத்திலிருந்து 3200 உயரத்தில் அமைந்திருக்கும் இம்மலைகளில் ஏழு சிகரங்கள் வானுயர்ந்து நிற்கின்றன.

முனிவர்

ஏழுமலையானே மனித உருவில் அவதரித்ததாகவும், அவரே இந்த கோயிலைக் கட்டச் சொன்னதாகவும், முனிவர் ஒருவர் கூறினார்.

தொண்டைமான் வம்சம்

தொண்டைமான் வம்சத்தினரே, திருப்பதி கோயிலுக்கு தங்கத்தில் அலங்கரித்ததாகவும், அந்த வம்சத்திலேயே திருமலையான் மனிதராக அவதரித்ததாகவும் ஆந்திர மாநில மக்களிடையே பேச்சு இருக்கிறது.

தங்கக் கிணறு

தற்போதுள்ள கிணற்றைப் போலல்லாது. இந்த தங்கக் கிணறு தொண்டைமான் காலத்தில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததாம். உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கிணறு இது ஒன்றுதான் என்கின்றனர் பக்தர்கள்

படிக்கிணறு

படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு படிக்கிணறு என்றழைக்கப்படுகிறது. மனித பிறவி எடுத்த திருமலையான் இந்த கிணற்றில்தான் நீர் எடுத்து பூசைக்கு பயன்படுத்துவாராம்.

ஏழு சிகரங்கள்

ஆதிசேஷனின் வடிவாக கருதப்படும் இந்த சிகரங்கள் நாராயாணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி மற்று வெங்கடாத்ரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

வெள்ளிக்கிழமைகளில்

  • ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், திருமலையில் ஏழுமலையானுக்கு அபிசேகம் நடைபெறும்.

    இந்த அபிஷேகம் தங்கக் கிணற்றில் இருந்து வரும் நீரால் செய்யப்படுகிறது.

எப்படி செல்லலாம்

நாட்டின் பல திசைகளிலிருந்தும் இயக்கப்படும் ரயில் சேவைகளை கொண்டதாக திருப்பதி ரயில் நிலையம் அமைந்துள்ளது. மேலும் பெரிய ரயில் சந்திப்பான ரேணிகுண்டாவும் திருப்பதிக்கு அருகில் 10 நிமிடபயண தூரத்தில் உள்ளது. மற்றொரு முக்கியமான ரயில் சந்திப்பான கூடூர் இங்கிருந்து 84 கி.மீ தூரத்தில் உள்ளது. எனவே யாத்ரீகர்கள் ரயில் மூலமாக திருப்பதிக்கு வருவது மிக எளிதாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close