Breaking News
Home / தொழில்நுட்பம் / வடகொரியாவிற்கு ‘தமிழ்நாட்டு நெட்டிசன்கள்’ விடுத்த கோரிக்கை நிஜமாகிவிடும் போல.!?

வடகொரியாவிற்கு ‘தமிழ்நாட்டு நெட்டிசன்கள்’ விடுத்த கோரிக்கை நிஜமாகிவிடும் போல.!?

வடகொரியாவிற்கு ‘தமிழ்நாட்டு நெட்டிசன்கள்’ விடுத்த கோரிக்கை நிஜமாகிவிடும் போல.!?

வடகொரியாவிற்கு ‘தமிழ்நாட்டு நெட்டிசன்கள்’ விடுத்த கோரிக்கை நிஜமாகிவிடும் போல.!?

‘அந்த’ பேஸ்புக் மீம்தனை பார்த்ததுமே குபீரென்று சிரிப்பு கிளம்பினாலும், உண்மையிலேயே ஒரு வெடிகுண்டு வெடிப்பானது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமென்பதை நாம் அறிந்திருந்தால் கிளம்பிய சிரிப்பு உடனே அடங்கியிருக்கும் என்பது வேறு விடயம்.

சரி அதென்ன மீம்.?

‘தமிழ்நாட்டு மக்களின் அவலநிலையை மனதிற்கொண்டு தலைமை செயலகம் மீது, எல்லாரும் கூடும் நேரமா பாத்து குண்டு ஒன்னு போடு தல – இப்படிக்கு பாவப்பட்ட தமிழ்நாட்டு மக்கள்’ என்று வடகொரியா சர்வாதிகாரியான கிம் ஜோங்-உன் அவர்களுக்கு கடிதமொன்று எழுவது போன்ற ‘நெட்டிசன்கள் மீம்’ ஒன்று சமூக வளைத்தளத்தில் ஹிட் அடித்தது. நெட்டிசன்கள் விளையாட்டாக விடுத்த கோரிக்கையானது நிஜமாகிவிடும் போல தெரிகிறது. உடனே பீதி கொள்ள வேண்டாம். பீதிக்கொள்ள வேண்டியது நாமல்ல, லண்டன் மற்றும் நியூயார்க் வாசிகள் தான்.!

ஐரோப்பாவில் ‘தாக்குதல்’ பதற்றங்கள் நிலவி வருகிறது

கிம் ஜோங்-உன் என்ற சர்வாதிகார ஆட்சியாளனின் பிடியில் சிக்கித்தவிப்பது வடகொரியா மட்டுமல்ல, அதன் அண்டை நாடுகளும் தான், குறிப்பாக வடகொரியாவின் தாக்குதல் எல்லைகளுக்குள் இருக்கும் நாடுகள். வடகொரியா நிகழ்த்திய சமீபத்திய அணுவாயுத சோதனைக்குப் பின்னர், ஐரோப்பாவில் ‘தாக்குதல்’ பதற்றங்கள் நிலவி வருகிறது. முக்க்கியமாக – வடகொரியா எனும் முரட்டு அரசின் வரம்பிற்குள்ளே இருக்கும் – இங்கிலாந்தில்.!

வீழ்ந்தால் என்னவாகும்.??

இந்நிலைப்பாட்டில் ‘ந்யூக்மேப்’ வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி வட கொரியாவின் திகிலூட்டும் முகமொன்று வெளிப்பட்டுள்ளது. அதாவது, லண்டனின் இதயப்பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை தாக்குதலொன்று வீழ்ந்தால் என்னவாகும்.??

மிகசிறந்த இலக்குகளில் இங்கிலாந்தும் ஒன்று.!

வெளியான தகவலின் கீழ், ஒரு எச்-வெடிகுண்டு (அதாவது ஹைட்ரஜன் வெடிகுண்டு) தாக்குதலானது நகரத்தின் அனைத்து மூலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதையும், அதோடு ஐரோப்பியாவில் உள்ள நாடுகளில் வடகொரியாவின் மிகசிறந்த இலக்குகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பதையும் காட்டுகிறது.

100 கிலோ எடையுள்ள எச்-வெடிகுண்டு தரையிறங்கும் போது

ந்யூக்மேப் தகவலின்படி, ஒரு கற்பனையான 100 கிலோ எடையுள்ள எச்-வெடிகுண்டு தரையிறங்கும் போது சுமார் 130,000 பேர் குண்டு வெடிப்பில் கொல்லப்படுவார்கள் மற்றும் 355,000 பேருக்கும் மேலானோர் காயமடைவார்கள்.

வடகொரியா மிரட்டல் விடுத்தது

முன்னர் ஒருமுறை, ‘நியூயார்க் நகரத்தின் இதயமான மன்ஹாட்டனை துவம்சம் செய்ய பல்லிஸ்டிக் மிசைல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செலுத்தப்படும் எங்களின் ஒரு எச்-பாம்ப் போதுமானது’ என வடகொரியா மிரட்டல் விடுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சோவியத் ஒன்றியம் உருவாக்கியதை விடபெரியது

அந்த சமயத்தில், ‘எங்கள் ஹைட்ரஜன் குண்டு, சோவியத் ஒன்றியம் உருவாக்கிய ஹைட்ரஜன் வெடிகுண்டை விட பெரியது’ என்று கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (Democratic People’s Republic of Korea) பத்திரிக்கையான டிபிஆர்கே டுடே அறிவித்திருந்தது.

மன்ஹாட்டன் நொடியில் சாம்பலாகிவிடும்

‘ஒருவேளை வடகொரியா நியூயார்க்கின் மன்ஹாட்டனில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் பெல்லிஸ்டிக் தொழில்நுட்பத்தின் துணையோடு ஹைட்ரஜன் வெடிகுண்டை வீசினால், மன்ஹாட்டன் நொடியில் சாம்பலாகிவிடும்’ என்கிறார் அணு விஞ்ஞானியான சோ யோங் இல். நியூயார்க் நகரத்தின் அதிகளவு ஜனத்தொகையைக் கொண்ட மாநகராட்சிகளில் மன்ஹாட்டனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

1000 கிலோமீட்டர்கள் தாண்டியும்

மேலும் அணு விஞ்ஞானியான சோ யோங் இல் ‘வட கொரியா புதிதாக உருவாக்கியுள்ள ஹைட்ரஜன் குண்டு, நம் கற்பனைக்கு விஞ்சியது’ என்று அப்போதே எச்சரிக்கை விடுத்திருந்தார். சோவியத் யூனியன் காலத்தில் உருவான எச்-பாம்ப் ஆனது 1000 கிலோமீட்டர்கள் தாண்டி உள்ள கட்டிடங்களின் ஜன்னல்களை உடைத்தெறியும் வல்லமையையும், சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்றாம்-நிலை நெருப்பு காயங்களை உண்டாக்கும் வண்ணம் வெப்பத்தை வெளிப்படுத்தும் சக்தியையும் கொண்டிருந்தது.

சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி

கடந்த ஜனவரி மாதம், வடகொரியா நிகழ்த்திய எச்-பாம்ப் சோதனை (வடகொரியாவின் நான்காவது அணு ஆயுத சோதனை ) ஒரு சாதாரண அணு ஆயுத பரிசோதனை இல்லை என்பது ஒருபக்கமிருக்க, அமெரிக்காவின் ‘வெஸ்ட் கோஸ்ட்’ பகுதியை தாக்குமளவு தொழில்நுட்பம் வளர்ச்சியை வடகொரியா அடைந்து விட்ட நிலையில் அமெரிக்காவின் வட கிழக்கு கடற்கரையை வடகொரியாவால் தாக்க முடியுமா என்ற சந்தேகங்கள் நிலவி வந்தன, கடந்த வாரம் வடகொரியா வெற்றிகரமாக ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதித்தது அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது, வடகொரியா.

கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணை

வடகொரியவின் அரசு ஊடகம் இந்த சோதனையை ஒரு ‘சரியான வெற்றி’ என்று கூறியதுடன், தொலைதூர எதிரிகளை இலக்காகக் கொண்டிருக்கும் ஒரு கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணை (ICBM) வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த உலகிற்கு பறைசாற்றியது.

வாஸன்ங் 14

சோதனைக்குட்படுத்தப்பட்ட ஏவுகணையான வாஸன்ங் 14 (Hwasong 14) சுமார் 16 மீட்டர் உயரம் கொண்டுள்ளதாக இருந்தது. அதன் வீச்சு கிட்டத்தட்ட 6,000 மைல்கள் கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பூமியின் வட அரைக்கோளத்தில் உள்ள நாடுகளை தாக்குவதற்கு இந்த ஏவுகணை பயன்படுத்தலாம் என்பதோடு, நியூயார்க், பாரிஸ், லண்டன் போன்ற உலகின் மிக பிரபலமான நகரங்களும் வடகொரியாவின் இந்த திகிலூட்டும் ஆயுதத்தின் எல்லைக்குள் அடங்குகின்றன என்பது இதன் பொருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close