Breaking News
Home / தொழில்நுட்பம் / பிளாஸ்டிக் அரிசியும், முட்டையும் பொய்யாக இருக்கலாம். ஆனால் பிளாஸ்டிக் நீர் என்பது உண்மை.!

பிளாஸ்டிக் அரிசியும், முட்டையும் பொய்யாக இருக்கலாம். ஆனால் பிளாஸ்டிக் நீர் என்பது உண்மை.!

பிளாஸ்டிக் அரிசியும், முட்டையும் பொய்யாக இருக்கலாம். ஆனால் பிளாஸ்டிக் நீர் என்பது உண்மை.!

பிளாஸ்டிக் அரிசியும், முட்டையும் பொய்யாக இருக்கலாம். ஆனால் பிளாஸ்டிக் நீர் என்பது உண்மை.!

சில நேரங்களில், ஒரு வெளிப்பாடானது – ஒட்டுமொத்த உலகின் மீதான நமது பார்வையையும் கணப்பொழுதில் மாற்றி விடும். நாம் வாழும் இந்த உலகம், எந்த அளவிலான பிளாஸ்டிக் தன்மையை கொண்டுள்ளது என்பது சார்ந்து வெளியான சமீபத்திய ஆய்வறிக்கையும் – அப்படியான ஒரு வெளிப்பாடு தான்.

இன்று முதல் இந்த உலகின் மீதான உங்களின் பார்வை மாறுபடும். அதென்ன ஆய்வு.? அப்படி என்ன அதிர்ச்சிகரமான முடிவை அது வெளிப்படுத்தியுள்ளது.?

ஆர்டிக் மற்றும் ஆழமான பசிபிக் வரை.!

நமது சமுத்திரங்கள், எந்த அளவிலான பிளாஸ்டிக் கொண்டு நிரம்பியுள்ளதென்பதை நாம் கண்கூடாய் அறிவோம். மிதக்கும் பிளாஸ்டிக்குகள் கடல்களில் மிகப்பெரிய, அசிங்கமான சுழல்களால் உருவாக்கி, ஆர்டிக் மற்றும் ஆழமான பசிபிக்கின் தொலைதூர கடற்கரைகளை கூட சுற்றியுள்ளன என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

அனுதினமும் குடிக்கும் குழாய் நீரில்.!

ஆனால் நிலத்தின் ஒட்டுமொத்த மாசுபாடு மறைந்துள்ளது; மறைக்கப்பட்டுள்ளது. மலைகள், ஆறுகள், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலிருந்து நமக்கு கிடைக்கும் குழாய் தண்ணீரில் நம் கற்பனைக்கூட செய்து பார்க்கமுடியாத சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளது. அதாவது – நாம் அனுதினமும் குடிக்கும் குழாய் நீரில் நுண்ணிய பிளாஸ்டிக் இழைகள் நிரம்பியுள்ளன.

ஆய்வுக்குட்படுத்திய பின்னர்.?

இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் குழாய் நீரிலும் இந்த மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு டஜன் நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குழாய் நீர் மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய பின்னர் ஒட்டுமொத்தமாக, 83 சதவீத மாதிரிகள் நுண்ணிய பிளாஸ்டிக் இழைகள் மூலம் மாசுபட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் முதலிடம்.?

ஆய்வின் முடிவில் எந்தெந்த நாடுகளின் குழாய் நீரில் அதிக அளவிலான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு உள்ளதென்ற விவரங்களும் வெளியிடப்பட்டு. அந்த பட்டியலில் முதலிடம் வகிப்பது – அமெரிக்கா. இதில் கொடுமை என்னவென்றால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட குழாய் நீரானது நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் டவர்ஸ் கட்டிடம், காங்கிரஸ் கட்டிடம் மற்றும் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையக கட்டிடத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன என்பது தான்.

இந்தியாவிற்கு என்ன இடம்.?

ஆய்விற்கு பின்னர், குறிப்பிட்ட குழாய் நீரில் 94 சதவீதம் என்ற மிக அதிக அளவு மாசு வீதத்தைக் அமெரிக்கா கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்க்கு அடுத்த இடங்களில் லெபனான் மற்றும் இந்தியா மிக உயர்ந்த மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு விகிதங்களைக் கொண்டிருக்கின்றன.

‘அடுத்த பக்கம்’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் மற்றும் ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close