Breaking News
Home / ஆரோக்கியம் / ஒரு க்ளாஸ் பால் குடிக்கும் போதெல்லாம் இந்த கதைய நியாபகம் வச்சுக்கோங்க!

ஒரு க்ளாஸ் பால் குடிக்கும் போதெல்லாம் இந்த கதைய நியாபகம் வச்சுக்கோங்க!

ஒரு க்ளாஸ் பால் குடிக்கும் போதெல்லாம் இந்த கதைய நியாபகம் வச்சுக்கோங்க!

ஒரு க்ளாஸ் பால் குடிக்கும் போதெல்லாம் இந்த கதைய நியாபகம் வச்சுக்கோங்க!

இன்றைக்கு நமக்கு பால், தயிர், வெண்ணெய் என பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன என்றால் அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் வர்கீஸ் குரியன் தான்.

அடிப்படையான தேவை அவை ஏன் மக்களுக்கு கொண்டு சேரவில்லை என்பதை கண்டுபிடித்த எளிய தொழில்நுட்பங்களின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் மாபெரும் வெண்மை புரட்சியை செய்திருக்கிறார் வர்கீஸ் குரியன்.

வர்கீஸ் குரியன் :

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார். வசதியான குடும்பம் தான். அப்பா அரசு மருத்துவர் என்பதால் நிறைய ஊர்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும் .

லயலோ கல்லூரியில் பி.எஸ்சி பிசிக்ஸ் கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்ஞினியரிங் படித்தார்.

தன்னுடைய லட்சியப்படி ராணுவத்தில் சேர நினைத்தார். ஆனால் அவரின் அம்மா மறுத்ததால் லட்சியக்கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

டாடா வேலை :

குரியனின் மாமா ஜான் மத்தாய் சிபார்சின் படி குரியனுக்கு டாடா ஸ்டீல் கம்பெனியின் ஜாம்ஷெட்பூர் கிளையில் வேலை கிடைத்தது.

எப்போதும் சுயமாக சிந்திக்க வேண்டும் என்றே விரும்பும் குரியனுக்கு மாமா சிபாரிசில் கிடைத்த வேலையை தொடர விருப்பமில்லை.

ஸ்காலர்ஷிப் படிப்பு :

அப்போது பிரிட்டீஷ் அரசாங்கம். இந்தியா விலிருந்து 500 இன்ஜினீயர்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படிப்பதற்கான முழு ஸ்காலர்ஷிப் தரும் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. மெட்டலர்ஜி எனப்படும் உலோகவியல் பிரிவின் கீழ் குரியன் விண்ணப்பித்தார்.

பால் பண்ணை படிப்பு :

நேர்முகத் தேர்வுக்காக டெல்லி சென்ற போது உலோக வியல் துறையில் இடங்கள் நிரம்பிவிட்டன, பால்பண்ணை பொறியியல் படிப்புக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கும் என்று சொல்ல, மாமா நிழலிலிருந்து தப்ப வேறு வழி தெரியவில்லை. குரியன் சம்மதித்தார். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்தது.

அதிகாரிகளை ஏமாற்றிய குரியன் :

பால் பண்ணை படிப்பு பிடிக்கவில்லை ஆனாலும் மாமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைத்து ஒத்துக் கொண்டுவிட்டார். என்ன செய்ய என்று யோசித்தவருக்கு ஒரு வழி கிடைத்தது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் படிப்பில் சேர்ந்தால் இந்தியாவில் இருக்கும் அதிகாரிகளுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்து அங்கே பால் பண்ணை இன்ஜினியரிங் படிக்காமல் தனக்கு விருப்பமான உலோகவியல் துறையை தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பித்தார்.

அடுத்த பக்கம்’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் மற்றும் ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close